திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

மையத்தை காப்பாற்றியாக வேண்டும்.. ஒரு தலைவனாக கமலஹாசன் எடுத்த அதிரடி முடிவு, அதிரும் எதிர் கட்சிகள்

நடிகர் கமலஹாசன் கிட்டத்தட்ட அறுபது வருடங்களுக்கு மேல் தமிழ் சினிமாவில் இருக்கிறார். சினிமாவில் ஒரு மகா கலைஞனாக இருக்கும் கமலஹாசன் அரசியலுக்கு வந்தது என்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்று. ஏனென்றால் எம்ஜிஆர், விஜயகாந்த், ரஜினிகாந்த் போல கமல் தன்னுடைய படங்களில் என்றைக்குமே அரசியல் பேசியதில்லை.

கமலஹாசன் கடந்த 2017ல் தான் அரசியலுக்கு வரப்போவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டார். அதன்பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் மதுரையில் மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். 2024ல் பாராளுமன்ற தேர்தல் வர இருப்பதால் கமல் தேர்தல் களப் பணிகளில் மும்முரமாக இறங்கியிருக்கிறார்.

Also Read: ஸ்டாலின் போட்ட கட்டளை.. கும்பிடு போட்டு விலகும் உதயநிதி

2019 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் மற்றும் 2021 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை தனித்து நின்று போட்டியிட்ட கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் இரண்டு தேர்தல்களிலும் ஒரு இடம் கூட இல்லாமல் தோற்று போனது. இதில் பாராளுமன்ற தேர்தலில் கமலஹாசன் போட்டியிடவில்லை, சட்டமன்ற தேர்தலில் கோயம்புத்துர் தொகுதியில் நின்று தோல்வி அடைந்தார்.

இந்தியன் 2 படப்பிடிப்பு, பிக்பாஸ் படப்பிடிப்பு என பிசியாக இருக்கும் கமலஹாசன் நேற்று கட்சி நிர்வாகிகளுடன் முக்கியமான ஆலோசனை நடத்தி இருக்கிறார். இதில் நிர்வாகிகள் இந்த முறை ஜெயித்தே ஆக வேண்டும் எனவும், போன தேர்தல்களில் செய்த தவறை செய்து விட கூடாது எனவும் கூறியிருக்கிறார்கள். மேலும் கூட்டணி பற்றியும் பேசியிருக்கிறார்கள்.

Also Read: என்ன மீறி படத்தை ரிலீஸ் பண்ணிடுவியா.. விஜய்க்கு உதயநிதி போடும் ஸ்கெட்ச்

அப்போது கமலஹாசன் கூட்டணி பற்றி நான் பார்த்து கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். மேலும் நீங்கள் தளராமல் கட்சியை வலுப்படுத்தும் வேலைகளை பாருங்கள் என்று நம்பிக்கையாக கூறியிருக்கிறார். கமல் இம்முறை கூட்டணிக் கட்சியுடன் களம் இறங்கப்போவது உறுதியாகிவிட்டது. ஆனால் அவர் அதிமுக மற்றும் பாஜக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பில்லை.

கமல் கூட்டணி அமைக்க போவது திமுக கட்சியுடன் தான். உதயநிதி ஸ்டாலின் திரைப்படங்களில் கமலுடன் கைகோர்த்து அவரை அப்படியே கட்சி பக்கம் இழுத்து வந்துவிட்டது நன்றாகவே தெரிகிறது. மக்கள் நீதி மய்யம்-திமுக கூட்டணி பற்றிய அறிவிப்பு விரைவில் வெளியாகும். கமலின் இந்த முடிவு எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மிகப்பெரிய அதிர்ச்சியாக அமைந்துள்ளது.

Also Read: துணிவுக்கு பயந்து தேதியை மாற்றிய வாரிசு.. விஜய்யை விட உதயநிதிக்கு இவ்வளவு மவுசா?

Trending News