ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

பிக் பாஸுக்கு ரெட் கார்டு கொடுக்கப் போகும் கமல்.. ஆண்டவருக்கு உமன் சேஃப்டி தான் முக்கியம்

BB7 Tamil Red Card – Kamal: விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சி என்றாலே சண்டைக்கு எப்போதுமே பஞ்சம் இருக்காது. காதல், காமெடி, பெரிய சண்டை, தன்னைத்தானே தாக்கிக் கொள்வது, வீட்டை விட்டு உடனே வெளியேறுவது என நிறைய விஷயங்களை கடந்த ஆறு சீசன்களும் பார்த்து இருக்கிறது. ஆனால் இந்த சீசனில் தான் முதல்முறையாக பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற வார்த்தை உபயோகப்படுத்தப்படுகிறது.

பிக் பாஸில் கலந்து கொண்டாள் அதன் மூலம் சினிமாவில் ஜெயித்து விடலாம் என்ற கனவுகளோடு உள்ளே வந்தவர் தான் பிரதீப் ஆண்டனி. ஆனால் அவருக்கு இறுதியாக கொடுக்கப்பட்ட பட்டம் இவர் வீட்டில் இருந்தால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பது தான். போட்டியில் கலந்து கொண்ட போட்டியாளர்கள் ஒரு பக்கம் கமல்தான் ரெட் கார்ட் கொடுத்தார் என்று சொல்ல, கமலஹாசன் ஒரு எபிசோடு முழுக்க நான் ரெட் கார்டு கொடுக்கவில்லை என்று நிரூபித்து விட்டு சென்று விட்டார்.

பெண்கள் பாதுகாப்பு என்ற பெயரில் பிரதீப்புக்கு நியாயம் கிடைக்கவில்லை சரிதான். ஆனால் ஒரு பெண்ணின் உடல் அமைப்பை வைத்து பேசிய நிக்சன் இன்று வரை வீட்டுக்குள் இருப்பது தான் ஆச்சரியமாக இருக்கிறது. இங்கே பெண்கள் பாதுகாப்பு என்பது மொத்தமாக இருக்கும் பெண் போட்டியாளர்களை சார்ந்தது இல்லை, மாயா மற்றும் பூரணிமாவை சார்ந்தது என்பது நன்றாக தெரிந்து விட்டது.

Also Read:மாயா, பூர்ணிமாவுக்குள் விழுந்த விரிசல்.. எதிரெதிர் துருவமாக மாறப்போகும் Bully Gang

கமலின் பார்வையில், மாயா மற்றும் பூர்ணிமாவுக்கு பிக் பாஸ் வீட்டிற்குள் பாதுகாப்பு இல்லை. இரு பெண்கள் பெட்ரூம் அறைக்குள் பெட்ஷீட்டை மூடிக் கொண்டு பேசிக்கொண்டிருக்கும் பொழுது பிக் பாஸ் அழைத்து அவர்களை மைக்கை போட சொல்கிறார். மறைவான இடத்திற்கு சென்று பேசலாம் என்று பார்த்தாலோ அங்கேயும் நுழைந்து மைக்கை மாற்றுங்கள் என்று சொல்கிறார்.

பிக் பாஸ் வீட்டிற்குள் தனிமனித சுதந்திரம் என்பது எங்கே போனது என்று தெரியவில்லை. இரு பெண்கள் உட்கார்ந்து பேசுவதற்கு கூட சுதந்திரம் இல்லாமல் போய்விட்டது. பெண்களை எப்படி நடத்தும் பிக் பாசிற்கு இந்த வாரம் கமல் ரெட் கார்டு கொடுக்க வாய்ப்பு இருப்பதாக கூட நெட்டிசன்கள் பிரதீப்புடன் ஒப்பீடு செய்து இப்போது பேசி வருகிறார்கள்.

விசித்ரா விஷயத்தில் கூட மாயாவுக்கு ஏற்கனவே வாழ்க்கையில் இது போன்ற சில காயங்கள் நடந்திருக்கிறது. அதனால் தான் அவர் இப்படி நடந்து கொள்கிறார் என்பது போல கமல் ஒரு சப்பை கட்டு கட்டினார். ஒரு வேளை இந்த வாரம் பிக் பாஸ் செய்த விஷயங்களால் மாயாவுக்கு அந்த பழைய காயங்கள் ஞாபகம் வந்து விட்டதாக கூட சொல்ல வாய்ப்புகள் அதிகமாகவே இருக்கிறது.

Also Read:இவரா, அவரா வெளியேறப் போவது யாரு.? கடைசி நேரம் வரை ஆட்டம் காட்டும் பிக்பாஸ்

 

 

 

Trending News