தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் கமல்ஹாசன். இவரது நடிப்பில் வெளியான படங்கள் நடத்துவது சமீப காலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன. தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விக்ரம் படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தின் அறிவிப்பு வெளியானதிலிருந்து நாளுக்கு நாள் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. மேலும் இப்படத்தில் விஜய் சேதுபதி ஃபகத் பாசில் உட்பட பல பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர். தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கமல்ஹாசன் பொருத்தவரை சினிமாவில் யார் திறமையாக இருந்தாலும் அவர்களை வாழ்த்துவது தவறுவதில்லை. கிட்டத்தட்ட இவருடன் பணியாற்றிய நடிகர்களை உட்பட மற்ற படங்கள் பணியாற்றிய நடிகர்கள் வரை பலரையும் பாராட்டியுள்ளார்.
![kamal haasan](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/08/kamalhassan.jpg)
சமீபகாலமாக பலரிடமும் பாராட்டைப் பெற்ற திரைப்படம் சார்பட்டா பரம்பரை இப்படம் வெளியானதிலிருந்து ரசிகர்கள் பலரும் ஒவ்வொரு கதாபாத்திரத்தையும் பாராட்டி வந்தனர் அதனால் பல பிரபலங்களும் அப்படத்தில் நடித்த ஆர்யா, பசுபதி மற்றும் துஷாரா விஜயன் உட்பட அனைவரையும் பாராட்டினர்.
![kamal haasan](https://www.cinemapettai.com/wp-content/uploads/2021/08/kamal-hassan.jpg)
தற்போது கமல்ஹாசன் சார்பட்டா பரம்பரையில் பணியாற்றிய அனைத்து நடிகர்களையும் அழைத்து அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் ஒரு சில கதாபாத்திரங்கள் சிறப்பாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இப்புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பா ரஞ்சித் ரஜினியுடன் இணைந்து பணியாற்றி விட்டார். தற்போது கமல்ஹாசன் அழைத்து பாராட்டி உள்ளதால் விரைவில் கமல்ஹாசனை வைத்து படத்தை இயக்குவார் என சினிமா வட்டாரத்தில் பலரும் கூறி வருகின்றனர்.