சனிக்கிழமை, நவம்பர் 23, 2024

எம்ஜிஆர் உடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட கமல்ஹாசன்.. கடைசியில் வருந்திய சம்பவம்

உலகநாயகன் கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாகவே சினிமாவில் நுழைந்ததால் அந்த காலத்து நடிகர்கள் முதல் தற்போது உள்ள நடிகர்கள் வரை எல்லோருடனும் பழகும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது. அதுமட்டுமின்றி எல்லா மொழி படங்களிலும் அப்போதே நடிக்க ஆரம்பித்து விட்டார்.

இந்நிலையில் சிவாஜியுடன் இணைந்து கமலஹாசன் பல படங்களில் நடித்து விட்டார். இவர்களது கூட்டணியில் வெளியான தேவர்மகன் படம் மாபெரும் வரவேற்பை பெற்றிருந்தது. தற்போது வரை இப்படம் தமிழ் சினிமாவின் அடையாளமாக உள்ளது.

Also Read :பெண் வேடத்தில் நடித்த எம்ஜிஆர், சிவாஜி.. புகைப்படத்தை பார்த்து பெண்களே பொறாமை படும் அழகு

ஆனால் எம்ஜிஆர் உடன் கமலஹாசன் குழந்தை நட்சத்திரமாக உள்ள போது ஆனந்த ஜோதி என்ற படத்தில் நடித்திருந்தார். இதைத்தொடர்ந்து கமல் இளமையாக உள்ளபோது எம்ஜிஆர் உடன் நடிக்கும் வாய்ப்பு அவரை நாடி வந்துள்ளது. ஆனால் அது நிறைவேறாமல் போய் உள்ளது.

அதாவது 1975 ஆம் ஆண்டு கே எஸ் சேது மாதவன் இயக்கத்தில் எம்ஜிஆர், லதா ஆகியோர் நடிப்பில் வெளியான நாளை நமதே என்ற படத்தில் நடிக்கும் வாய்ப்பு கமலஹாசனுக்கு வந்துள்ளது. இப்படத்தில் எம்ஜிஆரின் தம்பி கதாபாத்திரத்திற்காக கமலஹாசன் தேர்வாகியுள்ளார்.

Also Read :எம்ஜிஆர் காதுபட அசிங்கமாக பேசிய டெக்னீசியன்.. ஒரு வாரம் காத்திருந்து கொடுத்த பதிலடி

ஆனால் அந்த சமயத்தில் கமலஹாசன் மலையாள படம் மற்றும் வேறு இரண்டு படங்களில் கமிட்டாகி இருந்ததால் எம்ஜிஆர் உடன் நடிக்கும் வாய்ப்பை தவற விட்டுள்ளார். மேலும் நாளை நமதே படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. அதோடு மட்டுமல்லாமல் நாளை நமதே என்ற பாடல் இப்போது நன்கு பரிச்சயமான பாடலாக உள்ளது.

மேலும் எம்ஜிஆர் உடன் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டது மிகப் பெரிய இழப்பு என்று கமலஹாசன் பிக் பாஸ் மேடையில் ஒரு முறை கூறியிருந்தார். அதன் பிறகு கடைசி வரை எம்ஜிஆர் உடன் நடிக்கும் வாய்ப்பு தனக்கு கிடைக்கவே இல்லை என கமல் வருந்து இருந்தார்.

Also Read :50 வயதை நெருங்கியும் ஹீரோயினாக நடிக்கும் 4 நடிகைகள்.. இன்றுவரை விடாத கமலஹாசன்

- Advertisement -spot_img

Trending News