சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கமலுடன் நடித்து மார்க்கெட் இழந்த 3 நடிகர்கள்.. கம்பெனி குடுத்ததுக்கு வச்சி செஞ்சிடீங்களே

வளர்ந்து வரும் ஹீரோக்கள் மற்ற நடிகர்களுடன் துணை நடிகர்களாக நடித்தால் அவர்களுக்கு பட வாய்ப்புகள் நிறைய வரத் தொடங்குகிறது. ஆனால் அதே போல் துணை நடிகர்களாக நடித்து வாய்ப்பு இழந்த நடிகர்களும் உண்டு. அவ்வாறு கமலுடன் இணைந்து நடித்த மூன்று நடிகர்கள் மார்க்கெட்டை இழந்து உள்ளார்கள்.

தமிழ் சினிமாவில் அலைபாயுதே படத்தின் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்த மாதவன், மின்னலே, ரன் என வெற்றிப் படங்களைக் கொடுத்தார். மாதவன், கமலுடன் இணைந்து அன்பே சிவம் படத்தில் பணியாற்றி இருந்தார். அதன் பிறகு மாதவன் நடித்த படங்கள் எதுவும் சரியாக போகவில்லை. அதன் பிறகு மீண்டும் கமலுடன் இணைந்து மன்மதன் அம்பு படத்தில் பணியாற்றி இருந்தார். அதனால் ஹிந்தி சினிமாவுக்கு சென்றுவிட்டார்

நடன இயக்குனரான பிரபு தேவா மிஸ்டர் ரோமியோ, மின்சாரக்கனவு என பல படங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இவர் காதலா காதலா படத்தில் கமலுடன் இணைந்து நடித்துள்ளார்.

இப்படம் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றாலும் பிரபுதேவாவுக்கு எந்த வரவேற்பும் கிடைக்கவில்லை. அதன் பிறகு ஒரு சில படங்களில் நடித்த பிரபுதேவா படங்களை இயக்க தொடங்கிவிட்டார்.

மௌலி இயக்கத்தில் கமல், அப்பாஸ், சிம்ரன் நடிப்பில் வெளியான திரைப்படம் பம்மல் கே சம்பந்தம். அப்போது வளர்ந்து வரும் நடிகராக இருந்த அப்பாஸக்கு பம்மல் கே சம்பந்தம் படத்திற்கு பிறகு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. இப்போது பெண்களின் கனவு நாயகனாக வலம் வந்த அப்பாஸ் முன்னணி நிறுவனத்தில் நல்ல சம்பளத்துடன் வேலை பார்த்து வருகிறார்.

தற்போது உள்ள முன்னணி நடிகர்களின் இடத்தை பிடித்திருக்க வேண்டிய நல்ல திறமையுள்ள இந்த மூன்று நடிகர்களும் துணை நடிகர்களாக நடித்ததால் அந்த நிலைக்கு வர முடியாமல் போனது. ஆனால் தற்போதும் கமல் தனக்கான இடத்தை தக்க வைத்துள்ளார்.

Trending News