திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வயது 20 தான்..’விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் இளம்நடிகை.

‘மாஸ்டர்’ படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் புதிய படம் ‘விக்ரம்’. இதில் கமல்ஹாசன் நாயகனாக நடிக்கிறார். அவருடன் இணைந்து விஜய் சேதுபதி, பகத் பாசில், நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ் ஜெயராம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

ராஜ் கமல் பிலிம்ஸ் மூலம் இப்படத்தை தயாரிக்கிறார் கமல். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் நடிக்கும் நாயகிகள் குறித்து இதுவரை எந்தவொரு அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது.

இந்தநிலையில், தற்போது முதன்முறையாக ஷிவானி இப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிக்பாஸ் சீசன் 4-ல் கலந்துகொண்டு பாலாஜியுடன் இணைத்து கிசுகிசுக்கப்பட்டார். இதற்காக பிக்பாஸ் வீட்டிற்குள் வைத்தே அவரது அம்மாவிடம் திட்டும் வாங்கினார். இது, சமூகவலைதளங்களில் பரவலாக பேசப்பட்டது.

20 வயதே ஆகும் ஷிவானி, விக்ரம் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக படக்குழு வட்டாரத்தில் கூறப்படுகிறது.

vijay sethupathi shivani narayanan
vijay sethupathi shivani narayanan

வரும் ஆகஸ்ட் 24 ஆம் தேதி முதல் காரைக்குடியில் நடக்கவுள்ள ‘விக்ரம்’ படப்பிடிப்பில் ஷிவானி இணையவுள்ளார். விஜய் டிவியில் ஏற்கனவே இவர் சரவணன் மீனாட்சி 3, கடைக்குட்டி சிங்கம், ராஜா ராணி, ரெட்டை ரோஜா ஆகிய நாடகங்களில் நடித்துள்ளார்.

விக்ரம் திரைப்படம் அரசியல் த்ரில்லர் என்று கூறப்படுகிறது. அதோடு, இப்படத்தின் மொத்த படப்பிடிப்பையும் ஒரே அட்டவணையில் முடிக்க திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக கொரோனாவால் தடைப்பட்டிருந்த இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், கமல்ஹாசனின் முந்தைய படங்களில் ஒன்றாக விருமாண்டி படத்தின் போஸ்டரை போலவே இருந்ததாக நெட்டீஸ்சன்கள், கலாய்த்தும், தங்கள் கருத்துகளையும், வாழ்த்துக்களையும் அள்ளி விசியது நினைவிற்குறியது. படத்தின் டைட்டிலும், கமல்ஹாசனின் முந்தைய வெற்றிப்படமான விக்ரம் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எதுஎப்படியோ, புதிய கதையாகவும் ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தும் படமாக வந்தால் போதும் என்கின்றனர், சினிமா விமர்சகர்கள்….

Trending News