தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி சார்பாக அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் உட்பட அனைத்துத் தொகுதியிலும் பல வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டனர்.
ஆனால் எந்த ஒரு வேட்பாளரும் தேர்தலில் வெற்றிபெறவில்லை. கமலஹாசன் கோயமுத்தூர் தெற்கு தொகுதியில் நின்றார். இவர் கண்டிப்பாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 51,481 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.
கமலஹாசன் தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்பே அவரது அண்ணனான சாருஹாசன் பல பேட்டிகளில் கமலஹாசன் வெற்றி பெறுவாரா என்பது சந்தேகம் தான் என கூறியிருந்தார்.
அதுமட்டுமில்லாமல் கமலஹாசனை விட ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக வெற்றி பெறுவார் எனவும் கருத்து தெரிவித்திருந்தார். தற்போதும் அதே தான் சொல்லியிருக்கிறார்.
என்னுடைய காலத்தில் கமலஹாசன் நடிகராகவே பலரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அப்படியிருக்கும்போது எப்படி இவரை தேர்தலில் ஏற்றுக்கொள்வார்கள். சினிமாவிலும் கமல்ஹாசனுக்கு பல திறமைகள் இருந்தாலும் மக்கள் முதலிடத்தை கொடுக்கவில்லை என தெரிவித்துள்ளார்.
கமல்ஹாசனை விட ரஜினிகாந்திற்கு தான் சினிமாவில் ஐந்து மடங்கு சம்பளம் அதிகம் எனவும். ரஜினி ஒரு வேளை தேர்தலுக்கு வந்திருந்ததால் ஜெயித்து இருக்கலாம். மேலும் இது ஒரு திராவிட நாடு எப்போதும் பிராமணர்களுக்கு அரசியல் எதிர்காலம் கிடையாது. கமல்ஹாசன் தோல்விக்கு ஜாதியும் ஒரு முக்கிய காரணம் என தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் நடிகர் சிவாஜி கணேசனை விட கமலஹாசன் பெரிய அளவில் தோல்வியை சந்திக்க வில்லை ,தோல்வி என்பது புதிதல்ல ஆனால் கமல்ஹாசன் சினிமாவிற்காக பல கஷ்டங்கள் பட்டுள்ளார். அவர் தேர்தலில் வெற்றி பெற்றால் மக்களுக்காக கஷ்டப்பட்டு கண்டிப்பாக ஏதாவது நல்லது செய்வார் எனவும் கூறியுள்ளார்.