புதன்கிழமை, ஜனவரி 15, 2025

தனிக்காட்டு ராஜாவாக வசூலை அள்ள போகும் கமல்.. பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் சூப்பர் ஹிட் படம்

Actor Kamal Haasan: பான் இந்தியா மூவி என்ற ட்ரெண்டை தாண்டி தற்போது ரீ ரிலீஸ் டிரன்ட் ஆகி வருகிறது. ஏற்கனவே ரிலீஸ் ஆகி சூப்பர் ஹிட் அடித்த படங்களை மீண்டும் ரீ ரிலீஸ் செய்து ரசிகர்களை சந்தோஷப்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் ரஜினிகாந்த் தன்னுடைய பாபா படத்தை ரிலீஸ் செய்தார். அதே மாதிரி வேட்டையாடு விளையாடு, வாரணம் ஆயிரம், சுப்பிரமணியபுரம், 7ஜி ரெயின்போ காலனி போன்ற படங்களும் ரீரிலீஸ் செய்யப்பட்டன.

கடந்த 2007ஆம் ஆண்டு ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி அடைந்த வேட்டையாடு விளையாடு படத்தை மீண்டும் ரீ ரிலீஸ் செய்தார்கள். இந்த படம் மூன்று வாரங்கள் வரை ஓடி நல்ல வசூலை கொடுத்தது. தன்னுடைய படங்களுக்கு இப்படி ஒரு வரவேற்பு இருப்பதை தெரிந்து கொண்டு உலக நாயகன் கமலஹாசன் தன்னுடைய பிறந்தநாளை ஒட்டி அவருடைய மிகப்பெரிய ஹிட் படத்தை மீண்டும் ரீ ரிலீஸ் செய்ய இருக்கிறார்.

கடந்த 1987 ஆம் ஆண்டு இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் நாயகன் படம் வெளியானது. தமிழ்நாட்டை சேர்ந்த வேலு நாயக்கர் என்பவர் தாராவியில் தாதாவாக மாறுவதுதான் இந்த படத்தின் கதை. சரண்யா பொன்வண்ணன், ஜனகராஜ், நாசர், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி ஆகியோர் நடித்திருந்தனர். பி சி ஸ்ரீராம் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்திருந்தார்.

இந்தப் படத்தில் ஒலிப்பதிவு முழுக்க அந்தந்த சந்தர்ப்பத்திற்கு ஏற்றது போல் இருக்கும். அப்போது தமிழ்நாட்டில் இருந்த திரையரங்குகளில் ஒரே மாதிரியான ஒலி அளவை மட்டுமே பயன்படுத்தினர். நாயகன் படம் வெளியான புதிதில் படத்தின் வசனங்கள் புரியவே இல்லை என்ற ஒரு நெகட்டிவ் விமர்சனம் இருந்து வந்தது. இதிலிருந்து தான் மணிரத்தினம் படங்களில் வசனமே புரியாது என்ற எண்ணமும் சினிமா ரசிகர்களுக்கு வந்தது.

ஃபிலிம்மில் பதிவாக்கியப்பட்டிருந்த இந்த படத்தை தற்போது டிஜிட்டல் முறையில் ஒலி மற்றும் வண்ணம் போன்றவற்றை மெருகேற்றி ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 36 வருடம் கழித்து நாயகன் படம் 280 தியேட்டர்களில் ரிலீஸ் ஆக இருக்கிறது. தமிழ்நாட்டில் 120 திரையரங்குகள், கேரளாவில் 60 திரையரங்குகள், கர்நாடகாவில் 20 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது.

உலகநாயகன் கமலஹாசன் பிறந்தநாள் நவம்பர் 7 அன்று கொண்டாடப்பட இருக்கும் நிலையில் இந்த படத்தை நவம்பர் மூன்றாம் தேதி ரிலீஸ் செய்ய இருக்கிறார்கள். தீபாவளி ரிலீஸ் க்கு ஒரு வாரத்திற்கு முன்பு நாயகன் படம் ரிலீஸ் செய்யப்படுவதால் கண்டிப்பாக நல்ல வசூலை அள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. மற்ற படங்களுடன் மோதாமல் கமல் தனிக்காட்டு ராஜாவாக இறங்க திட்டமிட்டு இருக்கிறார்.

Trending News