வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

கமல், ரஜினி இணைந்து நடித்த 6 படங்கள்.. வில்லனாக மிரட்டிய சூப்பர் ஸ்டார்

இருபெரும் ஜாம்பவான்களான கமல், ரஜினி தமிழ் சினிமாவை கலக்கி வந்தார்கள. இவர்கள் இருவரும் தனக்கென்று ஒரு பாணியை தேர்ந்தெடுத்து படங்கள் நடித்தனர். ரஜினி, கமல் இருவரும் சேர்ந்து நடித்த படங்களை பார்க்கலாம்.

மூன்று முடிச்சு: 1976 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மூன்று முடிச்சு. கே.பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமலஹாசன், ரஜினிகாந்த் ,ஸ்ரீதேவி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தில் ரஜினிகாந்த் வில்லனாக நடித்திருந்தார்.

16 வயதினிலே: தமிழ் திரைப்பட வரலாற்றில் புதிய திருப்பம் ஒன்றை உருவாக்கிய திரைப்படம் 16 வயதினிலே . கமலஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடிப்பில் இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியானது. இப்படத்தில் கமலின் சப்பானி கதாபாத்திரமும், ஸ்ரீதேவியின் மயிலு கதாபாத்திரமும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. இத்திரைப்படம் 175 நாட்களுக்கு மேல் வெற்றிகரமாக ஓடியது.

16 vayathinile
16 vayathinile

இளமை ஊஞ்சலாடுகிறது: ஸ்ரீதர் இயக்கத்தில் வெளிவந்த இப்படத்தில் கமலஹாசன், ரஜினிகாந்த், ஜெயசித்ரா, ஸ்ரீப்ரியா ஆகியோர் நடித்திருந்தனர். 1978 ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

அவள் அப்படித்தான்: 1978 ஆம் ஆண்டு ஸ்ரீருத்ர இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் அவள் அப்படித்தான். இத்திரைப்படத்தில் கமலஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா மற்றும் சிவசந்திரன் நடித்துள்ளனர். இப்படத்தில் தமிழில் வெளியான கடைசி கருப்பு வெள்ளை திரைப்படம்.

அலாவுதீனும் அற்புத விளக்கும்: 1979ஆம் ஆண்டு வெளியான இத்திரைப்படத்தை இயக்கியவர் ஐ வி சசி. கமலஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீபிரியா, ஜெயபாரதி நடித்திருந்தார்கள். இப்படத்தில் கமல்ஹாசன் அலாவுதீன் ஆக நடித்து இருந்தார்.இப்படத்தில் பூதம் கதாபாத்திரம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. இத்திரைப்படம் வெற்றி பெற்றது.

நினைத்தாலே இனிக்கும்: 1979 ஆம் ஆண்டு வெளியான திரைப்படத்தில் கமலஹாசன், ஜெயப்பிரதா, ரஜினிகாந்த் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தின் இயக்குனர் கே பாலச்சந்தர்.தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் ஒரே நேரத்தில் எடுக்கப்பட்ட திரைப்படம். இப்படத்தின் இசை எம்எஸ் விஸ்வநாதன்.

Trending News