சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்தை படத்தில் நடிக்க சிபாரிசு செய்த கமல்ஹாசன்.. வண்ட வண்டாய் வெளியான உண்மைகள்

கமல்ஹாசன் மற்றும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் இவர்களிருவரும் தொழில் துறையில் தாண்டி மிகவும் நெருங்கிய நண்பர்களாக உள்ளனர். ஆனால் அதைவிட மிகவும் முக்கியமானது இவர்கள் இருவரும் ஒரே குலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தான். அதனால் கமல்ஹாசன் சிபாரிசு செய்து கமல்ஹாசனின் படங்களில் கிருஷ்ணமாச்சாரி நடிக்க வைப்பதாகருந்த தகவல் வெளியாகி உள்ளது.

கமல்ஹாசனின் திரைவாழ்க்கையில் மிகவும் முக்கியமாக படங்களில் ஒன்று பஞ்சதந்திரம். இப்படத்தில் கமல்ஹாசனுக்கு நான்கு மொழி மாநிலத்தைச் சேர்ந்த நண்பர்களாக யூகி சேது மற்றும் ஜெயராம், ரமேஷ் அரவிந்த், ஸ்ரீமன் ஆகியோர் நடித்திருந்தனர். இதில் யூகிசேது கதாபாத்திரத்தில் முதலில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் நடிக்க இருந்ததாக தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

yugi sethu
yugi sethu

அதுமட்டுமில்லாமல் கமல்ஹாசன் அபூர்வ சகோதர்கள் திரைப்படத்தில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க சிபாரிசு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் கோகிலா எனும் படத்தில் கமல்ஹாசன் கண் சிமிட்டும் காட்சி அப்படியே கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் கண்சிமிட்டும் செயலை மையப்படுத்தியே கமல்ஹாசன் இப்படத்தில் கண்சிமிட்டும் காட்சியில் நடித்ததாக கூறியுள்ளனர்.

கமல்ஹாசன் பல படங்களில் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் நடிக்க வைக்க சிபாரிசு செய்துள்ளார். ஆனால் எதிர்பாராதவிதமாக நடிக்க முடியாமல் போனதால் கமல்ஹாசன் வேறுவழியின்றி இயக்குனர் சொன்ன நடிகரையே படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டுள்ளார் என்பது இந்த தகவல் தகவலிலேயே தெரிகிறது.

இந்த தகவலை அறிந்த ஒரு சில சினிமா நடிகர்கள் என்னதான் சொந்தக்காரராக இருந்தாலும் தரையில் விழுந்தால் ஓட்ற மண்ணுதான் ஓட்டும் என கிண்டலாக கமல்ஹாசனுக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Trending News