எஸ் ஏ சந்திரசேகர் நிலவே மலரே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு நடிகர் ரகுமானை அறிமுகப்படுத்தி வைத்தார். அன்றைய காலகட்டத்தில் டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என்றாலே ரகுமானை தான் அனைத்து இயக்குனர்களும் தேடுவார்கள், மிகவும் பிரபலமான நடிகர்களுள் ஒருவராக இருந்தார்.
அதுமட்டுமில்லாமல் பிறக்கும் போதே தனக்கு நடனத்தில் திறமை இருந்ததால், அதனாலேயே கிளாசிக்கல் மற்றும் வெஸ்டர்ன் நடனம் சிறப்பாக ஆடுவதாகவும் பல பிரபலங்கள் பாராட்டி உள்ளனர்.
அவர் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சந்தோஷமான நிகழ்வு என்றால் அது சிவாஜிகணேசனுடன் மீன் சாப்பிட்டது என கூறியுள்ளார். அதாவது அன்புள்ள அப்பா படத்தில் ஒன்றாக ரகுமான் மற்றும் சிவாஜி கணேசன் இணைந்து நடித்துள்ளனர். அப்போது சிவாஜி கணேசன் அவர் மேல் கைபோட்டு மீன் கறி சாப்பிடலாம் என அழைத்துச் சென்றதாகவும் அது வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு நிகழ்வு என தெரிவித்துள்ளார்.
புரியாத புதிர் படத்தில் நடிக்கும் போது அவருக்கு மிகவும் உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. அதனால் இறுதிகட்ட படப்பிடிப்பு தள்ளி வைத்துள்ளனர். ஆனால் படப்பிடிப்பிற்கு அனைத்து நடிகர்களும் வந்ததால் யாருக்கும் எந்த பாதிப்பும் வரக்கூடாது என நினைத்து உடல்நிலை சரியில்லாமல் இருந்தாலும் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியை நடித்துக் கொடுத்துவிட்டு சென்றுள்ளார்.
ஆரம்பகாலகட்டத்தில் ரகுமான் அஜித்தை போலவே ஸ்மார்ட்டாக இருப்பாராம். அதனாலேயே 80’s காலகட்டதின் அஜித் குமார் என தற்போதைய பிரபலங்கள் கூறி வருகின்றனர்.
ஆனால் ரகுமானுக்கு சினிமாவில் மிகவும் பிடித்த நடிகர் என்றால் அது கமல்ஹாசன் தான். அதுமட்டுமில்லாமல் கமல்ஹாசன் போல் அனைத்து கதாபாத்திரத்திலும் நடிக்க வேண்டும் என்பதே இவருடைய ஆசையாகவே இருந்துள்ளது.
ஏ ஆர் ரகுமானின் மனைவியின் அக்காவை தான் ரகுமான் திருமணம் செய்து கொண்டுள்ளார். தற்போது இவர்கள் இருவருமே சினிமா துறையில் பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.
ரகுமான் நடிப்பில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வெற்றியடைய தரமான கமெர்சியல் திரைப்படங்கள்.