திங்கட்கிழமை, ஜனவரி 20, 2025

கமல் தட்டிய புத்தாண்டு வாழ்த்து.. பயப்படாம படிங்க இந்த முறை அவர் ட்வீட் புரியும்

வழக்கமாக புரியாத பாஷையில் பேசும் கமல் இந்த முறை சற்று புரியும் வகையில் தனது ட்வீட்டை தட்டி உள்ளார். தமிழ் புத்தாண்டு வாழ்த்து சொல்வதற்காக கமல் செய்த ட்வீட்டை பலர் ஷேர் செய்து வருகின்றனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தமிழ் கேரளா உட்பட சில மொழிகளில் சேர்த்து புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார். மேலும் தமிழக அரசியல் தலைவர்கள், நடிகர்கள், நடிகைகள் என பல பிரபலங்கள் வாழ்த்துக்களை பரிமாறி வருகின்றனர். அதில் கமல் ட்வீட்டை எதிர்பார்த்து அவரது ரசிகர்கள் காத்திருப்பார்கள் ஏன் என்றால் அவருடைய ட்வீட் அவருக்கு மட்டுமே புரியும்.

kamal-tamil-new-year-wishes
kamal-tamil-new-year-wishes

அவர் தனது ட்வீட்டில் ‘தேர்தல் முடிந்து நம் எதிர்காலத்திற்காகக் காத்திருக்கும் தருணத்தில், ஒன்றாய்க் கூடவும் எண்ணங்களைப் பகிரவும் வாய்ப்பளிக்கும் ஒரு தருணம் இந்தத் தமிழ்ப் புத்தாண்டு. நம் நம்பிக்கைகளுக்கு விதைப் போடும் இந்நன்னாளில் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்’ என்று கமல் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது ட்வீட்டை தட்டி உள்ளார்.

Trending News