ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 26, 2025

20 வருடத்திற்கு முன்பே தேடிப்போய் வாய்ப்பு கொடுத்த கமல்.. ஒர்த் இல்லை என ஒதுங்கிய விவேக்

கமல்ஹாசன் நடிப்பில் கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் வெளியான திரைப்படம் தெனாலி. இப்படத்தில் தேவயானி, ஜெயராம், ஜோதிகா மற்றும் மதன் பாபு போன்ற பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

இப்படத்தில் “டைமண்ட் பாபு” எனும் காமெடி கதாபாத்திரத்தில் நடித்திருந்த மதன் பாபு கதாபாத்திரத்திற்கு முதலில் பிரபல காமெடி நடிகரை தெனாலி படத்தில் நடிக்க வைக்க கே எஸ் ரவிக்குமார் அணுகியுள்ளார்.

அந்த பிரபலம் யார் என்றால் தமிழ் சினிமாவில் கருத்து கந்தசாமி என அழைக்கப்படும் நம்ம விவேக் தான். தெனாலி படத்தில் மதன்பாபு கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு விவேக்கை முதலில் கேட்டுள்ளனர்.

கதையை முழுவதுமாக கேட்டு விட்டு பின்பு விவேக் இந்த படத்தில் எனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் இல்லை. அதனால் இந்த படத்தில் நான் நடிக்கவில்லை, வேறு ஏதாவது ஒரு நடிகரை வைத்து படத்தை எடுத்துக் கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

kamal haasan vivek
kamal haasan vivek

இதனால் வேறுவழியின்றி படத்தின் இயக்குனரான கே எஸ் ரவிக்குமார் அன்றைய காலகட்டத்தில் காமெடியில் பிரபலமாக இருந்த மதன் பாபுவை நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார்.

தெனாலி படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்ததால் அன்றைய காலகட்டத்தில் விவேக் மிகவும் வருந்தியதாகவும் இப்படிப்பட்ட சூப்பர் ஹிட்டான கமல்ஹாசன் படத்தை நடிக்காமல் மிஸ் செய்து விட்டோமே என கவலை பட்டதாக செய்திகள் வெளிவந்தன.

Trending News