திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சூப்பர் ஸ்டார் பட்டத்தால் ஓயாத அக்கப்போர், ஆண்டவர் கொடுத்த பதிலடி.. அட இது ஏன் ரஜினிக்கு தோணல!

Kamal Haasan: தமிழ் சினிமாவில் கடந்த சில மாதங்களாக ஓயாத போராட்டமாக போய்க்கொண்டிருப்பது சூப்பர் ஸ்டார் பட்டம் தான். அதிலும் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் ரிலீஸ் ஆன பிறகு இது எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றியது போல் பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. பல சினிமா பிரபலங்களும் யார் சூப்பர் ஸ்டார் என்ற கேள்விக்கு பதில் சொல்கிறேன் என்ற பெயரில் அவர்கள் பங்குக்கு ரசிகர்களை ஏத்தி விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உலகநாயகன் கமலஹாசன் இந்த சர்ச்சையில் தற்போது வரை தலையிடவில்லை என்றாலும், இந்த பட்டங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளுக்கு ஏற்கனவே தன்னுடைய பாணியில் சிறப்பாக பதில் சொல்லி இருக்கிறார். அது தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. அவருடைய கோணத்தில் இதுவரையும் யாரும் யோசித்து இது போன்ற ஒரு பதிலை சொல்லவில்லை.

Also Read:கோடியில் புரண்டாலும் படுக்கை தரையில் தான்.. சூப்பர் ஸ்டாரின் மறுபக்கம்

ஆர்யா மற்றும் நயன்தாரா நடித்த ராஜா ராணி பட வெற்றி விழாவின் போது, தொகுப்பாளர் ஒருவர் ஆர்யாவை அடுத்த காதல் மன்னன் என்று சொல்கிறார்கள் என்று சொல்லும் பொழுதே, கமல்ஹாசன் இருந்துட்டு போகட்டுமே, அதில் இப்போது என்ன பிரச்சனை இருக்கிறது என்று ரொம்பவும் கூலாக பதில் சொல்லி இருப்பார். ஜெமினி கணேசனுக்கு பிறகு, தமிழ் சினிமாவில் காதல் மன்னன் என பெயர் வாங்கியது கமல் தான் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் பேசிய கமலஹாசன் பட்டம் என்பது பறந்து கொண்டே தான் இருக்கும். அது எப்போதும், யார் கையிலும் நிலைத்து நிற்காது. இது போன்ற வளர்ந்து வரும் கதாநாயகர்கள் எங்களுடைய பட்டங்களை எடுத்துக் கொள்ளும் பொழுது, அதன் சுமை தான் எங்களுக்கு குறைகிறது என்று சிரித்துக் கொண்டே சொல்லி இருப்பார். இதை தற்போது ரஜினியுடன் ஒப்பிட்டு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆக்கி வருகிறார்கள்.

Also Read:மூன்றே நாளில் இத்தனை கோடியா?. இண்டஸ்ட்ரியல் ஹிட் கொடுக்க தயாராகும் ஜெயிலர்

ஆனால் உண்மையில் ரஜினியும் எனக்கு சூப்பர் ஸ்டார் பட்டம் வேண்டும், நான்தான் எப்போதும் சூப்பர் ஸ்டார் என்றெல்லாம் சொல்லவில்லை. ஆரம்ப காலத்தில் இருந்து இந்த பட்டம் எனக்கு வேண்டாம் என நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்றுதான் இசை வெளியீட்டு விழாவில் பேசியிருப்பார். ஆனால் படத்தின் சூழ்நிலைக்காக எழுதப்பட்ட பாடலுக்காக தற்போது சம்பந்தமே இல்லாமல் ரஜினியை தாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

முன்னணி ஹீரோக்களுக்கு இது போன்ற பட்டங்கள் என்பதெல்லாம் அவர்கள் மேல் இருக்கும் அன்பின் பெயரில் கொடுக்கப்படுவது. அப்படி இருக்கும் பொழுது ஒருத்தருடைய பட்டம் இன்னொருத்தருக்கு தான் என சம்பந்தமே இல்லாமல் தற்பொழுது தான் இது போன்ற சர்ச்சை எழுந்து வருகிறது. அதிலும் இந்த சூப்பர் ஸ்டார் பட்டத்திற்காக மட்டும்தான் இது போன்ற பிரச்சனைகள் தமிழ் சினிமாவில் எழுந்திருக்கின்றன.

Also Read:மாஸ் காட்டிய முத்துவேல் பாண்டியன், மொத்தமாய் மண்ணை கவ்விய சிரஞ்சீவி.. ஆந்திராவை அலறவிட்ட சூப்பர் ஸ்டார்

Trending News