சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

உதயநிதிக்கு போட்ட மெகா தூண்டில்.. பல உண்மைகளை மேடையிலேயே போட்டுடைத்த உலகநாயகன்

உதயநிதி ஸ்டாலின் தற்போது தமிழ் சினிமாவில் வெளியாகும் பெரும்பான்மையான படங்களை தனது ரெட் ஜெயன்ட் மூவிஸ் மூலம் கைப்பற்றி வருகிறார். அதிலும் விஜய், கமல், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் போன்ற முன்னணி நடிகர்களின் படங்களை வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகிறார்.

இந்நிலையில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரிப்பு நிறுவனம் ஆரம்பித்து பதினைந்து ஆண்டுகள் நிறைவு பெற்றதை கொண்டாடும் விதமாக உதயநிதி விழா ஒன்றுக்கு ஏற்பாடு செய்திருந்தார். இந்த விழாவில் திரைத்துறையைச் சார்ந்த பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

அதில் குறிப்பாக சரியான நேரத்தில் உலகநாயகன் கமலஹாசன் கலந்து கொண்டார். கிட்டத்தட்ட 5 மணி நேரம் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியில் கமல் கடைசி வரை கலந்து கொண்டாராம். இதுவரை எந்த ஒரு விழாவுக்கும் இவ்வளவு நேரம் கமல் ஒதுக்கியது இல்லையாம்.

இந்நிகழ்ச்சியில் பேசிய கமல் அடுத்ததாக உதயநிதியை வைத்து ஒரு படத்தை தயாரிக்க உள்ளதாக மேடையிலேயே உண்மையை போட்டு உடைத்துள்ளார். அதுமட்டுமன்றி விஸ்பரூபம் படத்தின் பிரச்சனையை உதயநிதியிடம் சென்றிருந்தால் அது சுமுகமாக முடித்து இருக்கும் என கமல் கூறியிருந்தார்.

ஏனென்றால் தற்போது சில வருடங்களாக கிடப்பில் போட்டிருந்த இந்தியன் 2 படத்தின் பிரச்சனையை உதயநிதி தான் சுமுகமாக முடித்து வைத்தார். இந்நிலையில் உதயநிதி தனது டுவிட்டர் பக்கத்தில், 15 வருட ரெட் ஜெயன்ட் மூவிஸ் இன் சினிமா பயணத்தை கொண்டாடும் விதமாக தன்னுடன் பங்காற்றியவர்களை நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கௌரவித்தோம்.

அதில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் அடுத்த படத்தின் கதை நாயகனாகும் பெருமைமிகு வாய்ப்பை எனக்கு வழங்கி, அதற்கான
அறிவிப்பை வெளியிட்ட கமல்ஹாசன் சாருக்கு நன்றி என்று உதயநிதி பதிவிட்டிருந்தார். மேலும் தற்போது வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் விக்ரம் படத்தின் தமிழ்நாட்டு உரிமையை உதயநிதி தான் கைப்பற்றி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News