திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஆண்டவரை அஸ்தமனம் ஆக்கிய பிக் பாஸ்.. சிஷ்யன் வாங்கி கொடுத்த பெயரை மொத்தமாய் காலி செய்த கமல்

BB7 Tamil: கமலஹாசனுக்கு எதுக்கு இந்த வேலை என அவருடைய ஆத்மார்த்தமான ரசிகர்களே கதறும் அளவுக்கு பிக் பாஸில் சம்பவம் செய்து கொண்டிருக்கிறார். பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்து அவரை காலி செய்து விட்டோம் என நினைத்தார் கமல். ஆனால் மொத்த கர்மாவும் சுற்றி அடிப்பது கமலை தான். 60 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் இருக்கும் ஒரு நடிகன், பிக் பாஸில் இரண்டு வாரங்கள் இருந்த போட்டியாளரை விட குறைந்த செல்வாக்குடன் இருப்பது அதிர்ச்சியாக தான் இருக்கிறது.

கமலுக்கு கிட்டத்தட்ட பாபநாசம் படத்திற்கு பிறகு சொல்லிக் கொள்ளும் மலரும் வெற்றி படங்கள் எதுவும் இல்லை. இது பற்றி சினிமா விமர்சகர் செய்யாறு பாலு பேசுகையில், 2கே இலசுகளை பொறுத்த வரைக்கும் கமல் என்பவர் ஒரு பழைய நடிகர், கிட்டத்தட்ட மைக் மோகன் ரேஞ்சுக்கு தான் அவர் இருந்தார். அவரை இளைஞர்களிடம் கொண்டு சேர்த்த படம் என்றால் விக்ரம் தான்.

லோகேஷ் கனகராஜ், பகத் பாஸில், விஜய் சேதுபதி என இளசுகளின் கூட்டணியில் கமல் நடித்ததால் இன்றைய காலகட்டத்தில் இருக்கும் இளைஞர்களிடம் கவனம் பெற்றார். விக்ரம் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் கமலின் ஒவ்வொரு படங்களை பற்றியும் மேடையில் பேச ஆரம்பித்ததால் இன்றைய இளசுகளிடம் அட தமிழ் சினிமாவில் இப்படி ஒரு நடிகரா என்ற பெயரை வாங்கிக் கொடுத்தார்.

Also Read:பிக் பாஸ் ஸ்கிரிப்ட் ரைட்டருக்கு கமல் மேல் அப்படி என்னதான் காண்டு?. மனப்பாடம் பண்ணி மாட்டிக்கொண்ட ஆண்டவர்

யானை தன் தலையிலேயே மண்ணை வாரி போட்டுக் கொள்வது போல் கமல் பிக் பாஸ் மூலம் சிஷ்யன் லோகேஷ் கனகராஜ் வாங்கி கொடுத்த மொத்த பெயரையும் கெடுத்துக் கொண்டார். பிரதீப் ஆண்டனிக்காக வரிந்து கட்டிக்கொண்டு இளசுகள் முதல் வயதான பாட்டிகள் வரை கமலுக்கு எதிராக பேசி வருகிறார்கள். இந்த பிக் பாஸ் சீசன் 7 மொத்தமாய் நாசமாய் போனதற்கு எல்லா காரணமும் பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்ததால் தான்.

கேள்விக்குறியாகும் அரசியல் வாழ்க்கை

அதிலும் கடந்த வாரம் மணி மற்றும் தினேஷ் பேசிய சாதாரண விஷயத்தை தேவையில்லாமல் டிவிஸ்ட் பண்ணி நிக்சனுக்கு ஆதரவாக கமல் பேசியது பிக் பாஸ் பார்வையாளர்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி இருக்கிறது. கமலும் இந்த நிகழ்ச்சியால் தன்னுடைய பெயர் டேமேஜ் ஆகி கொண்டிருப்பதை உணர்ந்துவிட்டார்.

15 போட்டியாளர்களுக்கு இடையே நீதியை நிலை நாட்ட முடியாத கமல் எப்படி நாட்டை ஆளுவார் என அவருடைய அரசியல் வாழ்க்கையே அஸ்தமனம் ஆகும் அளவுக்கு விஷயம் பெரிசாகி விட்டது. கமல் அடுத்த சீசனில் இருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதில்லை என்ற செய்தி வெளியாகி இருக்கிறது. மீதமிருக்கும் 25 நாட்களில் தன்னுடைய பெயரை சரி செய்ய முயற்சி செய்வாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Also Read:43% ஓட்டுக்களை வாரி சுருட்டிய போட்டியாளர்.. பிக்பாஸ் ஓட்டிங்கில் நம்பர் ஒன் இவர்தான்

Trending News