சாய்பல்லவிக்கு இருக்கும் தைரியம் கமலஹாசனுக்கு கொஞ்சம் கூட இல்லை என பலரும் விமர்சித்து வருகின்றனர்.இஸ்லாமியர்கள் பண்டிதர்களை தாக்கியதற்கும், இந்துக்கள் இஸ்லாமியர்களை தாக்கியதற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை என நடிகை சாய்பல்லவி தெரிவித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான விரத பர்வம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் புரமோஷனுக்காக சாய்பல்லவி பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பேட்டி கொடுத்து வந்தார். நடிகர் ராணா டகுபதி, நிவேதா பெத்துராஜ்,ப்ரியாமணி, நந்திதா தாஸ் உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தின் ட்ரைலர் அண்மையில் வெளியாகி சர்ச்சையானது.
இந்நிலையில் ஒரு பேட்டியில் இப்படத்தில் சாய்பல்லவி நக்சலைட்டாக நடித்ததுக் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.அதற்கு பதிலளித்த சாய்பல்லவி, யாராக இருந்தாலும் பாதிக்கப்பட்டவர்களை பாதுகாக்க வேண்டும் என்பதே தனது நிலைப்பாடு என சாய்பல்லவி தெரிவித்திருந்தார். மேலும் இடது சாரி வலது சாரி என்பது இருந்தாலும் நான் என் பெற்றோரால் பொதுவாக உள்ளவராக வளர்க்கப்பட்டதாக சாய்பல்லவி தெரிவித்தார்.
மேலும் சமீபத்தில் வெளியான காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தில் பண்டிதர்களை கொன்று குவித்த இஸ்லாமியர்களும்,அதேபோல மாட்டிறைச்சியை வைத்திருந்த இஸ்லாமியரை துன்புறுத்தி அவரை ஜெய் ஸ்ரீராம் என்று கூறும்படி வற்புறுத்திய இந்துக்களும் சமமே என தெரிவித்திருந்தார்.
இவ்வளவு தைரியமாக நடிகை சாய்பல்லவி பேசியுள்ளார், ஆனால் கமலஹான் பல திரைப்படங்களில் பல கெட்டப்பில் நடித்து, தன் மனதில் தோன்றியதை பேசிவரும் இவர், சமீபத்தில் இவர் நடித்த விக்ரம் திரைப்படதத்தில் இடம்பெற்ற பத்தல பத்தல பாடலில் மத்திய அரசை சாடும் வகையில் இருந்த சர்ச்சைக்குரிய வரிகளை நீக்கி இருந்தார்.
மேலும் இதுகுறித்து கமலஹாசனிடம் கேள்வி எழுப்பிய நிலையில், மழுப்பிச் சென்றார். ஆனால் முன்னணி நடிகையாக வளர்ந்துவரும் சாய்பல்லவி தைரியமாக பேசி அனைவரின் பாராட்டுகளை பெற்று வருகிறார்.
காஷ்மீர் பைல்ஸ் திரைப்படம் கடந்த மார்ச் மாதம் ரிலீசான நிலையில் இத்திரைப்படத்தை பார்த்த இந்திய பிரதமர் மோடி பாராட்டிய நிலையில் சாய்பல்லவி இத்திரைப்படத்தை ஒப்பிட்டு பேசியது நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியள்ளது.