வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

தூங்கு மூஞ்சி அஸ்வினை தூக்கிவிடும் கமல்ஹாசன்.. இனியாவது வாய்க்கு பூட்டு போட்டா நல்லது

விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அஸ்வின். இதல் கிடைத்த அறிமுகத்தால் வெள்ளித்திரையில் அஸ்வினுக்கு பட வாய்ப்பு குவிய தொடங்கியது. அப்போது என்ன சொல்லப் போகிறாய் என்ற படத்தில் அஸ்வின் நடித்திருந்தார்.

அப்போது பிரஸ்மீட்டில் அஸ்வின் 40 கதையை கேட்டு தூங்கி விட்டேன் என்று கிண்டல் அடித்த பேசி சர்ச்சையில் சிக்கி இருந்தார். அதன் பின்பு என்ன சொல்லப் போகிறாய் படமும் வெளியாகி தோல்வியை சந்தித்து. இதைத்தொடர்ந்து இணையத்தில் அஸ்வினை நெட்டிசன்கள் வறுத்தெடுக்க ஆரம்பித்தனர்.

Also Read : அஸ்வின் மாதிரி ஆட்டம் போடும் குக் வித் கோமாளி நடிகை.. இப்படியே போனா காணாம போயிடுவீங்க!

இதனால் சினிமா கேரியரை போகும் அளவிற்கு அஸ்வினின் பெயர் ரொம்ப டேமேஜ் ஆனது. இதை தொடர்ந்து பட வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்த அஸ்வினுக்கு பிரபு சாலமன் ஒரு வாய்ப்பு கொடுத்துள்ளார். அதாவது இவர் இயக்கத்தில் உருவாகும் செம்பி படத்தில் அஸ்வின் நடித்துள்ளார்.

இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் கோவை சரளா நடித்துள்ளார். பிரபு சாலமனின் எல்லா படங்கள் போல இந்தப் படத்திலும் தம்பி ராமையா நடித்துள்ளார். இன்று இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உலக நாயகன் கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளார்.

Also Read : தேவையில்லாத வேலையைப் பார்த்த அஸ்வின்.. ரவுண்டு கட்டி அடித்த அஜித் ரசிகர்கள்

ஏனென்றால் கமல் தனது ராஜ்கமல் பிலிம்ஸ் மூலம் அடுத்து அஸ்வின் படத்தை தயாரிக்க உள்ளார். தற்போது இளம் நடிகர்களின் படங்களை தயாரிப்பதில் கமல்ஹாசன் ஆர்வமாக உள்ளார். திறமையான நடிகர் என்பதால் அஸ்வினையும் சினிமாவில் தூக்கி விட வேண்டும் என்பதற்காக கமல் இவ்வாறு செய்துள்ளார்.

மேலும் நீண்ட கால நட்பின் காரணமாக கோவை சரளா கேட்டுக் கொண்டதாலும் இந்த இசை வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் கலந்து கொண்டுள்ளார். உலக நாயகன் கொடுத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு இனியாவது வாய்க்கு பூட்டு போட்டு அஸ்வின் நடந்தால் அவரது கேரியர் நன்றாக இருக்கும் ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Also Read : முதல் படத்திலேயே சக்கை போடு போட்ட 5 நடிகைகள்.. கமல்ஹாசனால் சினிமாவை விட்டே ஓடிப்போன நடிகை

Trending News