சில நாட்களுக்கு முன்பு உலக நாயகன் கமல்ஹாசன் உடல்நலக்குறைவு காரணமாக கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அதில் அவருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதியானது.
அதன் காரணமாக அவர் ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மருத்துவமனையில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட கமல் தனக்கு நோய் தொற்று ஏற்பட்டிருப்பதை சமூக வலைதளம் மூலமாக மக்களுக்கு அறிவித்தார்.
இதனால் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வந்தனர். இந்நிலையில் கமல்ஹாசனின் உடல்நிலை பற்றி மருத்துவமனை நிர்வாகம் தற்போது பரபரப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, நடிகர் கமல்ஹாசனுக்கு நோய் தொற்று கட்டுக்குள் இருப்பதால் அவரின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கமல்ஹாசன் கதர் ஆடை பற்றிய விளம்பரத்திற்காக அமெரிக்கா சென்று திரும்பிய பிறகுதான் அவருக்கு லேசான இருமல் இருந்துள்ளது. இரண்டு டோஸ் தடுப்பூசி போட்டுக் கொண்ட பிறகும் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
இன்று மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்ட இந்த அறிக்கையால் தமிழ் திரையுலகைச் சேர்ந்த பலரும் கமல்ஹாசன் விரைவில் குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.