வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

மாஸ் ஹீரோவை அமெரிக்காவில் மடக்கிய கமல்.. அடுத்த தயாரிப்புக்கு ரெடியாகும் ராஜ்கமல் நிறுவனம்

Kamal Haasan – Raj Kamal Production: உலகநாயகன் கமலஹாசனுக்கு விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு தற்போது இந்தியன் 2 திரைக்கு வர இருக்கிறது. கமல் மற்றும் சங்கர் கூட்டணியில் வெற்றி பெற்ற இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை தான் தற்போது படமாக்கி இருக்கிறார்கள். இந்த படம் வரும் ஏப்ரல் மாதம் ரிலீஸ் ஆகும் என உதயநிதி தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில் சமீபத்தில் இயக்குனர் சங்கர் மற்றும் கமலஹாசன் இருவரும் அமெரிக்கா சென்றிருந்தனர். இந்தியன் 2 பட சம்பந்தப்பட்ட வேலைகளுக்காக தான் இவர்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து சென்றது. இதில் இயக்குனர் சங்கர் படத்தின் எடிட்டிங் வேலைகளை முடித்துவிட்டு இந்தியா திரும்பிவிட்டார். கமல் மட்டும் அமெரிக்காவிலேயே இருக்கிறார்.

Also Read:முரட்டு நடிகரையே பிஆர்ஓ ஆக மாற்றிய லோகேஷ்… ஓவர் துதி பாடும் கமல் நண்பர்

கமல் அமெரிக்காவில் தங்கியிருப்பதற்கு காரணம் அவர் அடுத்தடுத்து படங்களில் நடிக்க இருப்பதால் வயது குறைப்பு சிகிச்சை மேற்கொண்டு வருகிறார் என்றும், இந்த சிகிச்சையை முடிந்த பிறகு கிட்டத்தட்ட 30 வயது குறைவாக காணப்படுவார் என்றும், இது போன்ற சிகிச்சைகள் அமெரிக்காவில் செய்யப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின. ஆனால் அதெல்லாம் உண்மை இல்லை.

கமலஹாசன் சமீபத்தில் கமிட் ஆகி இருக்கும் ப்ராஜெக்ட் கே திரைப்படத்தின் வேலைகளுக்காகத்தான் அங்கு பிரபாஸ் உடன் தங்கியிருக்கிறார். நேற்று பட குழுவினரால் இந்த படத்தின் கிளிம்ஸ் வீடியோ வெளியிடப்பட்டது. மேலும் படத்திற்கு கல்கி என பெயரிடப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. கமல் இதில் நெகட்டிவ் ரோலில் நடிக்கிறார்.

Also Read:எந்த நடிகர்களிடம் பார்க்காத கமலின் 6 அதிசய குணங்கள்.. 5 வயதில் சம்பளமாக எத கேட்டார் தெரியுமா.?

நடிகர் கமலுக்கு மற்றும் ஒரு பிளானும் இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. நடிகர் பிரபாஸை தன்னுடைய ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் நடிக்க வைக்கத்தான் கமல் திட்டம் போட்டு இருக்கிறார். பிரபாஸ் தற்பொழுது பான் இந்தியா ஹீரோவாக இருப்பதால் அவரை நடிக்க வைப்பதன் மூலம் கண்டிப்பாக மிகப்பெரிய லாபம் கிடைக்கும்.

தற்போது ராஜ்கமல் நிறுவனம் சிவகார்த்திகேயனின் 21 வது படத்தை தயாரித்து வருகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பானது காஷ்மீரில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதன் பின்னர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் STR 48 என்னும் பெயரிடப்படாத படத்தையும் தயாரிக்க இருக்கிறது.

Also Read:பொது இடத்தில் தர்ம அடி வாங்கிய 6 பிரபலங்கள்.. பிள்ளையையும் கிள்ளி விட்டு தொட்டிலையும் ஆட்டிய கமல்

Trending News