புதன்கிழமை, ஜனவரி 22, 2025

தளபதியை ஒதுக்கும் உலக நாயகன்.. குளறுபடி செய்ததால் கோபத்தின் உச்சகட்டத்தில் கமல்

தற்போது எல்லா சோசியல் மீடியாவிலும் வைரலாகி வருவது தளபதி 67 படத்திற்கான அப்டேட்டுகள். இதற்கு முக்கிய காரணமாக இருப்பது இயக்குனர் லோகேஷ் மற்றும் நடிகர் விஜய்யின் காம்போ. இது தவிர இந்த படத்தில் நடிக்க இருக்கும் நடிகர்களின் எண்ணிக்கையை குறித்து மிகப் பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது.

இதனைத் தொடர்ந்து தளபதி 67 ல் கமலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. லோகேஷ் இந்த படத்திற்கு கமல்ஹாசனை தேர்ந்தெடுத்தது வெயிட்டான கதாபாத்திரமே காரணம். இவருக்கான கேரக்டர் என்னவாக இருக்கும் என்று யூகிக்க முடியாத அளவில் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

Also read: அத்தனை பேரையும் ஒரே நாளில் ஜம்மு காஷ்மீரில் ஆஜர் படுத்தும் லோகேஷ்.. பட்டைய கிளப்பும் தளபதி 67

அந்த எதிர்பார்ப்பை சுக்கு நூறாக்கி விட்டார் கமலஹாசன். ஏனென்றால் அவர் இந்த படத்தில் நடிக்க மறுத்துவிட்டார். இதற்கு காரணம் கமலுக்கும், விஜய்க்கும் ஏற்கனவே ஒரு மனக்கசப்பு இருந்தது தான். கமலின் ராஜ் கமல் தயாரிப்பு நிறுவனத்தில் விஜய் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் விஜய் நடிக்கவில்லை.

இதை மனதில் வைத்துக் கொண்டு கமல் இப்பொழுது பழி வாங்கி விட்டார். அதுமட்டுமில்லாமல் விஜய் சொல்வது ஒன்று செய்வது ஒன்று என இருப்பதால் கமல் அவரைக் கண்டு கொள்ளவில்லை. இப்படி விஜய் செய்த குளறுபடியினால் கோபத்தின் உச்சகட்டத்தில் கமல் எடுத்த முடிவு. ஆனாலும் லோகேஷ்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்து வருகிறார்.

Also read: வேகம் எடுக்கும் தளபதி 67.. முகமூடி கூலர்ஸ் போட்டு கெத்தாக வந்த திரிஷாவின் வைரல் போட்டோ

இந்நிலையில் விக்ரம் படத்தில் சூர்யா ரோலக்ஸ் கேரக்டரில் நடித்ததால், லோகேஷ் சூர்யாவிற்கு ஒரு படத்தை இயக்க போகிறார். அதனால் இந்தப் படத்தில் கமல் நடிப்பதாக ஒத்துக் கொண்டார். இது விக்ரம் படத்தில் சூர்யா செய்த உதவிற்கு கைமாறாக சூர்யாவிற்காக நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டார்.

இதனை எப்படி கையாளுவது என்று தெரியாமல் லோகேஷ் தவித்து வருகிறார். மேலும் இந்த பிரச்சனைகள் எல்லாம் தாண்டி தளபதி 67 படத்தை அவர் நினைத்தபடி மிக பிரம்மாண்டமாக எடுத்து ஒரு வெற்றி படமாக கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also readதூண்டிலை போட்டு திமிங்கிலத்தை பிடித்த ஆண்டவர்.. தளபதி 67ல் வச்சாங்க பாரு ட்விஸ்ட்

Trending News