சனிக்கிழமை, ஜனவரி 25, 2025

இந்தியன்-2 நஷ்டம், ஷங்கரை விடாமல் துரத்தும் லைகா.. கோர்த்து விட்டு வேடிக்கை காட்டும் நிறுவனம்

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் இந்தியன். இப்படத்தின் மூலம் ஷங்கர் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானார். முதல் படமே பெரிய அளவில் வெற்றி பெற்றதால் ஷங்கர் இப்படத்தின் இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டார்.

மேலும் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன் நடிக்க ஷங்கர் இயக்க லைகா நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வந்தது. மேலும் படத்தில் ஏகப்பட்ட காட்சிகள் எடுப்பதற்கு பிரமாண்டமான செட்டுகள் போடப்பட்டு படப்பிடிப்புகளை நடத்தின. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.

ஆனால் ஷங்கருக்கும் லைக்கா நிறுவனத்திற்கும் இடையே மிகப் பெரிய பிரச்சினை எழுந்தது. அதனால் படப்பிடிப்பிலிருந்து ஷங்கர் விலக ஆரம்பித்தார். இதனால் கோபமடைந்த லைக்கா நிறுவனம் ஷங்கர் இயக்கும் அடுத்தடுத்த படங்களுக்கு பல்வேறு விதமான பிரச்சனைகளை கொடுத்து வந்தது. இதனால் ஷங்கர் நீதிமன்றத்தில் முறையிட்டார்.

ஆனால் திரைத்துறையினர் பல கோடி ரூபாய் செலவு செய்துள்ள லைக்கா நிறுவனம் கேட்கும் கேள்விகள் சரியாகத்தான் உள்ளது. இவ்வளவு செலவு செய்துவிட்டு தற்போது ஷங்கர் அடுத்த படத்தை இயக்குவதற்கான முயற்சியில் ஈடுபட்டால் இவர்களுக்கு தான் பெரிய அளவில் நஷ்டம் வரும் அதனால் ஷங்கர் இந்தியன் 2 படத்தை எடுத்து முடித்த பிறகே மற்ற படங்களில் எடுக்க வேண்டும் என கூறி வந்தனர்.

shankar-cinemapettai
shankar-cinemapettai

இதனால் ஷங்கர் மற்றும் லைக்கா இருவரும் இணைந்து பேச்சுவார்த்தையின் அடிப்படையில் மீண்டும் பணியாற்ற முடிவு செய்தனர். ஆனால் மீண்டும் இவர்கள் இருவருக்கும் மீண்டும் இவர்கள் முட்டிக்கொண்டு எந்த ஒரு முடிவுக்கும் வராததால் இனிமேல் இந்தியன்2 படம் வெளியாவதற்கு வாய்ப்பே இல்லை என தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் ஷங்கர் தொடர்ந்து மற்ற பிரமாண்ட படங்களை இயக்கி வருவதால் இவரை பழிவாங்க வேண்டும் என்ற நோக்கத்துடன்தான் லைக்கா நிறுவனம் ஷங்கர் மருமகன் பாலியல் வழக்கில் சிக்குவதற்கு காரணம் என கோலிவுட் வட்டாரத்தில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

இது எந்த அளவிற்கு உண்மை என்பது தற்போது வரை தெரியவரவில்லை. அப்படி  சிக்கியதால் ஷங்கர் பர்சனல் வாழ்க்கையில் சில சர்ச்சைகளை சந்தித்து தற்போது எடுத்துக்கொண்டிருக்கும்  படப்பிடிப்பின் தரம் குறையும் அதைத்தாண்டி நிறுத்துவதற்கும் வாய்ப்புகள் உள்ளதாம்.

Trending News