வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

கமல்ஹாசன், ரகுவரன் இருவரும் இணைந்து நடிக்காமல் இருக்க இந்த மூன்று காரணம்தான்.. ஆண்டவரே இதெல்லாம் சரி இல்லங்க

தமிழ் சினிமாவில் சிறந்த 2  ஜாம்பவான்கள் இதுவரை ஒன்றாக எந்த படத்திலும் இணைந்து நடிக்கவில்லை. அவர்கள் யார் யார் மற்றும் எதற்காக இணைந்து நடிக்கவில்லை என்பதை தற்போது பார்ப்போம்.

 தமிழ் சினிமாவில் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கட்டிப்போட்டவர்  கமல்ஹாசன். அதேபோல் வில்லத்தனமான நடிப்பால் பல ரசிகர்களிடம் நீங்காத இடத்தை பிடித்தவர் ரகுவரன். இந்த இரண்டு ஜாம்பவான்களை சினிமா ரசிகர்கள் யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட மாட்டார்கள். ஏனென்றால் இவர்களின் நடிப்பு இன்று வரை ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை  பிடித்துள்ளது.

கமல்ஹாசன் மற்றும் ரகுவரன் இவர்கள் இணைந்து  நடக்காததற்கு 3 காரணங்கள் கூறப்படுகிறது. ஒரு காரணம் இவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் பல படங்கள் நடித்து வந்ததால் இணைந்து நடிக்கவில்லை என சொல்லப்படுகிறது.

kamal hassan raghuvaran
kamal hassan raghuvaran

இரண்டாவது காரணம் தற்போது எப்படி விஜய் மற்றும் அஜீத்  சினிமாவில் போட்டியாளராக  இருக்கிறார்களோ, அதேபோல் தான் அன்றைய காலத்தில் நடிகராக கமல்ஹாசனும் வில்லனாக ராகவனும் இருந்ததால் ஒன்றாக இணைந்து நடிக்கவில்லை என கூறப்படுகிறது.

அதுமட்டுமில்லாமல் மூன்றாவதாக கமல்ஹாசன் மற்றும் ராகவன் இருவரும் இணைந்து நடித்தால் ரகுவரன் நடிப்பால் ரசிகர்களை வென்று விடுவார் என கமல்ஹாசன் நினைத்ததாகவும் கூறப்படுகிறது

ஆனால் தமிழ் சினிமா ரசிகர்கள் இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கவில்லை என்பது பலருக்கும் வருத்தமாகத்தான் இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் இவர்கள் இருவரும் இணைந்து நடித்திருந்தால் அப்படம் வேற லெவல் இருக்குமென கூறப்படுகிறது.

Trending News