திங்கட்கிழமை, ஜனவரி 6, 2025

கமல்ஹாசனை நம்பி காணாமல் போன 3 முன்னணி நடிகர்கள்.. அதுலயும் இந்த 2 ஹீரோ ரொம்ப மோசம்!

தமிழ் சினிமாவில் தனது 5 வயதிலிருந்து குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்துள்ளவர் கமல்ஹாசன். அப்போது முன்னணி நடிகர்களாக இருந்த எம்ஜிஆர், சிவாஜி கணேசன் மற்றும் ஜெமினி கணேசன் ஆகியோருக்கு இணையாக அப்போது பல படங்கள் நடித்தவர் கமல்ஹாசன்.

அதிலும் இவர்களது படங்களிலும் கமல்ஹாசன் நடித்து சினிமாவில் புகழின் உச்சத்திற்கே சென்றார். மிகக்குறுகிய காலத்திலேயே அதாவது தனக்கு 25 வயதிலேயே 100-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

சினிமா துறையில் இருக்கும் அனைத்து கலைகளையும் கற்றுக் கொண்டவர் கமலஹாசன். சினிமாவில் கமலஹாசனுக்கு தெரியாத துறையே இல்லை என்ற அளவிற்கு அனைத்துத் துறைகளிலும் கால் பதித்து விட்டார். தற்போது தமிழ் சினிமாவை பெருமைப்படும் அளவிற்கு பல்வேறு விருதுகளையும் வாங்கி சாதனை படைத்துள்ளார்.

கமல்ஹாசனால் பல கலைஞர்கள் உருவானதும் உண்டு, ஒரு சில கலைஞர்கள் காணாமல் போனதும் உண்டு அப்படி 3 நடிகர்கள் சினிமாவில் ஹீரோவாக நடிக்க முடியாமல் தனது வாழ்க்கையை தொலைத்தவர்கள் யார் என்பதை பார்ப்போம்.

பிரபுதேவா

prabhudeva-cinemapettai
prabhudeva-cinemapettai

1994 ஆம் ஆண்டு இந்து படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் பிரபுதேவா. இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து காதலன், ராசையா மற்றும் மின்சார கனவு போன்ற பல படங்கள் ஹிட்டாகின. அதன்பிறகு கமல்ஹாசனுடன் இணைந்து பிரபுதேவா காதலா காதலா திரைப்படத்தில் நடித்தார். அப்படம் தோல்வி அடைந்தது. அதன் பிறகு பெரிய அளவில் ஹீரோவாக நடிக்க முடியாமல் போனார் பிரபு தேவா.

அப்பாஸ்

abbas
abbas

காதல் தேசம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் அப்பாஸ். அப்போது இவருக்கு அதிக அளவில் ரசிகைகள் இருந்தனர். ஆனால் கமலஹாசனுடன் இணைந்து பம்மல் கே சம்பந்தம் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றாலும் வசூல் ரீதியாக சற்று சரிவை சந்தித்தன. அதன் பிறகு பெரிய அளவில் அப்பாஸ் சினிமாவில் நிலைநாட்ட முடியாமல் காணாமல் போனார்.

மாதவன்

R-madhvan
R-madhvan

மணிரத்னம் இயக்கத்தில் அலைபாயுதே படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானவர் மாதவன். இப்படம் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற பிறகு பல பெண்களுக்கு கனவு கண்ணனாக இருந்தார். இவர் நடித்த அனைத்து படங்களும் தொடர்ந்து வெற்றி பெற்று வந்தன. அதன்பிறகு அன்பே சிவம் படத்தில் கமலஹாசனுடன் இணைந்து நடித்தார். இப்படம் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை. அதன்பிறகு இவர் நடித்த படங்கள் அனைத்தும் தோல்வியை சந்தித்தன.

இந்த மூன்று முன்னணி நடிகர்களும் ஹீரோக்களாக நடிக்க முடியாமல் தற்போது வரை தவித்து வருகின்றனர். அதிலும் பிரபுதேவா இயக்குனராகவும், நடன இயக்குனராக பணியாற்றி வருகிறார் மற்றும் அப்பாஸ் சினிமா துறையை விட்டு விலகியுள்ளார். மாதவன் மட்டும் விக்ரம் வேதா, இறுதிச்சுற்று போன்ற படங்களின் மூலம் தப்பித்து கொண்டார்.

Trending News