லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமலஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில், சூர்யா ஆகியோர் நடிப்பில் உருவான விக்ரம் படம் ஜூன் 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. தற்போது வரை உலக அளவில் 300 கோடியை தாண்டி வசூல் பெற்ற நிலையில் இப்போதும் திரையரங்குகள் ஹவுஸ்புல்லாக இருக்கிறது.
இந்நிலையில் விக்ரம் படத்தின் வெற்றி விழா நேற்று நடைபெற்றது. இதில் லோகேஷ் கனகராஜ், கமலஹாசன், உதயநிதி ஸ்டாலின், அனிருத் போன்ற பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இதில் பேசிய கமல்ஹாசன், லோகேஷ் பற்றி பல நல்ல விஷயங்களை பகிர்ந்து கொண்டார்.
மேலும் கே ஜி எஃப், ஆர் ஆர் ஆர், புஷ்பா போன்ற பட வரிசையில் தற்போது விக்ரம் படமும் இணைந்துள்ளதாக தனது மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டார். இந்நிலையில் லோகேஷ் அடுத்த படமும் என்னுடைய சொந்தப் படம் தான் என கமலஹாசன் கூறியுள்ளார்.
அதாவது அந்த படத்தை நான் போட்டியாக பார்க்கவில்லை. லோகேஷின் அடுத்த படத்திற்கு என்னுடைய வாழ்த்துக்கள். மேலும் அந்த படத்தில் அவருக்கு ஏதேனும் சந்தேகம் இருந்தால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் என்னிடம் வரலாம் என கமலஹாசன் கூறியுள்ளார்.
மேலும் லோகேஷின் அடுத்த படம் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து விக்ரம் படத்தின் அடுத்த பாகத்தை இயக்க லோகேஷ் வரவேண்டும் என கமலஹாசன் மேடையிலேயே வேண்டுகோள் வைத்துள்ளார்.
அதாவது விஜய்யின் தளபதி 67 படத்தை தான் லோகேஷ் அடுத்ததாக இயக்கயுள்ளார். இப்படத்தையும் கமலஹாசன் தனது சொந்த படமாகவே கருதுவதாக அந்த மேடையில் கூறியுள்ளார். மேலும் தளபதி 67 படத்திற்கு பிறகு மீண்டும் கமலஹாசனுடன் லோகேஷ் இணைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.