வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

லைக்காவை வளைத்துப் போட்ட உதயநிதி.. சேனாதிபதியாக மாஸ் காட்டும் இந்தியன்-2 பட போஸ்டர்

ஷங்கர் இயக்கத்தில் உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகி வந்த இந்தியன் 2 படம் பல்வேறு காரணங்களால் கிடப்பில் போடப்பட்டது. முதலில் படப்பிடிப்புத் தளத்தில் கிரேன் விபத்து காரணமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. அதன் பின்பு கோவிட் தொற்று காரணமாக படப்பிடிப்பு தள்ளிப்போனது.

இதை தொடர்ந்து இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் லைக்கா மற்றும் ஷங்கர் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் இப்படம் சில காலம் கிடப்பில் போடப்பட்டது. இந்நிலையில் உதயநிதி இப்பிரச்சினையில் தலையிட்டு முடிவுக்கு கொண்டு வந்துள்ளார்.

Also Read :கமல் கேரவனில் இவ்வளவு ரகசியங்களா.? திருப்தியடையாத ஆண்டவரின் மறுபக்கம்

தற்போது லைக்கா நிறுவனத்துடன் இணைந்து ரெட் ஜெயண்ட் மூவிஸ் இந்தியன் 2 படத்தைத் தயாரிக்க உள்ளது. இதைத்தொடர்ந்து இந்தியன் 2 படத்தின் போஸ்டர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது. நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தயாரிப்பு நிறுவனம் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

அதில் கமலஹாசன் வயதான கெட்டப்பில் உள்ள சேனாதிபதி போட்டோவை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும் இந்த அறிவிப்பை ஷங்கர், லைகா, கமலஹாசன் உள்ளிட்டோர் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளனர். இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.

Also Read : கமல் இல்லாமல் தொடங்கும் படப்பிடிப்பு.. ஏழரை முடிஞ்சி பெருமூச்சு விட்ட இயக்குனர்!

மேலும் கமலஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அடுத்த மாதம் செப்டம்பர் முதல் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொள்ள போவதாக அறிவித்துள்ளார். தற்போது இந்தியன் 2 என்ற ஹேஸ்டேக் இணையத்தில் ட்ரெண்டாகி உள்ளது. கமலஹாசன் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் படம் இண்டஸ்ட்ரியல் ஹிட்டடித்தது.

Indian-2

இதைத்தொடர்ந்து கமலஹாசனின் இந்தியன் 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. இனி ஏஜென்ட் விக்ரமை தொடர்ந்து சேனாதிபதியின் ஆட்டம் ஆரம்பிக்கிறது. இப்படம் குறித்த அடுத்த அடுத்த அப்டேட் விரைவில் வெளியாகும்.

Also Read :சிரிச்ச மாறியே மறுபக்கத்தை காட்டும் உதயநிதி.. ஷங்கரை கண்டுகொள்ளாமல் ஓவர் அலைக்கழிப்பு

Trending News