வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

கமலுக்கு ஜோடியா நடிச்சு என்ன பிரயோஜனம், கடைசியில் சீரியல் தான் மிச்சம்.. புலம்பும் 39 வயது நடிகை

கமல் உட்பட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த பிரபல நடிகை ஒருவர் பெரிய அளவு சினிமாவில் நிலைக்க முடியாததால் தற்போது சீரியலில் களமிறங்கியதை நினைத்து மிகவும் வருத்தப்படுகிறாராம்.

கமல் படங்களில் அவருடன் நெருக்கமாக நடிக்கும் பல நடிகைகளும் அவருடன் பின்னால் கிசுகிசுக்கப்படுவார்கள் என்பது தெரியாமல் அவருடன் விருமாண்டி படத்தில் ஒட்டி உரசியவர்தான் மலையாள நடிகை அபிராமி.

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பரபரவென முன்னணி நடிகையாக வலம் வந்தார். மார்க்கெட் நன்றாக சென்று கொண்டிருக்கும்போதே அவர் திருமணம் செய்து கொண்டு செட்டிலானது தான் பின்னாளில் அவருக்கு மார்க்கெட் இல்லாமல் போக காரணமாயிற்று.

அதன் பிறகு மலையாள சினிமாவில் ரீஎன்ட்ரி கொடுக்கு அவ்வப்போது குணச்சித்திர நடிகையாக நடித்து வந்தாலும் சோலோ ஹீரோயின் படங்களில் நடித்து மீண்டும் கம்பேக் கொடுக்க வேண்டும் என்பதுதான் அவரது ஆசையாம்.

ஆனால் அது நிறைவேறாது என தெரிந்து தற்போது சன் நிறுவனத்தின் மலையாள சேனலான சூர்யா தொலைக்காட்சியில் கணக்கன்மணி என்ற சீரியலில் நாயகியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

சினிமாவில் ஆரம்பத்தில் முன்னணி நடிகைகளாக இருக்கும் பலரும் பின்னாளில் சீரியலில் நடிப்பது ஒன்றும் புதிதல்ல. அந்தவகையில் அபிராமியும் இணைந்து விட்டார். இதற்கிடையில் சினிமாவில் சின்னச் சின்ன கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிக்க தயாராக இருக்கிறாராம்.

abirami-cinemapettai
abirami-cinemapettai

Trending News