வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

ஓவர் அப்செட்டில் கமல்.. இந்தியன் 3க்கு சுழிர்னு லைக்காக்கு வைத்த வேட்டு

இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் துளியளவும் மக்களை ஈர்க்கவில்லை என்பதை புரிந்து கொண்டார் ஆண்டவர். இப்பொழுது ஓவர் அப்செட்டில் என்ன செய்வதென்று தெரியாமல் திக்கு முக்காடி வருகிறார் கமலஹாசன். ஷங்கருடன், கமல் இருந்தும்கூட இப்படி படம் ரசிக்கும் படி இல்லையே என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.

இப்பொழுது கமலஹாசன் அதிரடியாக ஒரு முடிவை எடுத்து விட்டார். இந்தியன் மூன்றாம் பாகத்தில் என்னென்ன திருத்தங்கள் செய்ய முடியும் என்பது தான் இப்பொழுது அவரது முழு கவனமாக இருந்து வருகிறது. இன்னும் இரண்டு பாடல் காட்சிகள் மட்டுமே இந்தியன் மூன்றாம் பாகத்தில் மீதம் இருக்கிறது.

இரண்டாம் பாகத்தில் மோசமான விமர்சனத்தினால் கமல் இந்தியன் மூன்றாம் பாகத்தில் பல மாறுதல்களை செய்ய உள்ளார். கிட்டத்தட்ட முக்கால்வாசி படத்தையும் மாற்றுமாறு சங்கரிடம் கேட்டுள்ளார். சங்கரும் அதற்கு சம்மதித்துள்ளதாக தெரிகிறது.

இந்தியன் 3க்கு சுழிர்னு லைகாக்கு வைத்த வேட்டு

முப்பது நாட்கள் கூடுதலாக இந்தியன் மூன்றாம் பாகத்திற்கு அனைவரிடமும் கால்ஷீட் பெறப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட அனைத்து காட்சிகளையும் ரீசூட் செய்கின்றனர். படத்தை முழுவதுமாக திரும்ப எடுத்தாலும் பரவாயில்லை என்ற முடிவில் தான் இப்பொழுது சங்கரும் கமலஹாசனும், இருக்கின்றனர்.

இது ஒருபுறம் இருக்க ஏற்கனவே இந்தியன் இரண்டாம் பாகத்திற்கு 250 கோடிகளுக்கு மேல் செலவாகிவிட்டது. அதை திருப்பி எடுக்க முடியாது என்பதில் உறுதியாகிவிட்டது லைக்கா. இப்பொழுது மீண்டும் இந்தியன் மூன்றாம் பாகத்தை எடுப்பது என்றால் அவர்களுக்கு பெரிய சங்கடம் தான். எப்படிப் பார்த்தாலும் இதற்கும் 300 கோடிக்கு மேலாகும் என்று தெரிகிறது.

Trending News