வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

கமலின் அடுத்த இயக்குனர் இவர்தான்.. அஜித்தின் வெற்றி இயக்குனருக்கு அடித்த ஜாக்பாட்

கமலின் விக்ரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து இந்தியன் 2 படம் வர இருக்கிறது. இந்தப் படத்திற்கு பிறகு கமல் எந்த இயக்குனருடன் கைகோர்க்கப் போகிறார் என்ற கேள்வி நிலவியது. இதற்காக கமல் யார் படத்தில் நடிப்பார் என பல இயக்குனர் பெயர்கள் அடிபட்டது. அதற்காக கொஞ்சம் தாமதம் எடுத்து ஒரு இயக்குனரை இப்பொழுது தேர்வு செய்து இருக்கிறார்.

ஏனென்றால் விக்ரம் படத்தின் வெற்றியைப் போல இந்த படமும் அமைய வேண்டும் என்ற எண்ணத்தில் மிகவும் கவனமாக இருந்து வருகிறார். அதனால் நிறைய இயக்குனரிடம் இருந்து கதைகளை கேட்டு வைத்திருக்கிறார். அப்படி கேட்ட கதைகளில் இவருக்கு இரண்டு இயக்குனர் கதைகள் மிகவும் பிடித்திருக்கிறது.

Also read: காதுல பூ சுத்துன கமல், சிவகார்த்திகேயன்.. உங்க உருட்டுக்கு ஒரு அளவே இல்லையா.!

அந்த இரண்டு இயக்குனர்களான வெற்றிமாறன் மற்றும் எச்.வினோத். ஆனால் தற்போது வெற்றிமாறன் விடுதலை படத்தில் பிஸியாக இருக்கிறார். அதனால் இப்பொழுது எச் வினோத், கமலின் படத்துக்கு இயக்குனராக உறுதியாகி உள்ளார். இதை உறுதிப்படுத்தும் விதமாக கமல், எச் வினோத்திற்கு ஒரு காரை பரிசாக வாங்கி கொடுத்திருக்கிறார் என்ற செய்தி வெளிவந்துள்ளது.

எச்.வினோத்தின் கதைகள் பெரும்பாலும் வித்தியாசமாகவும் ரசிகர்களை சிந்திக்க வைக்கும் விதமாகவும் தான் படத்தை விறுவிறுப்பாக கொண்டு போவார். அந்தளவுக்கு இவரின் படங்கள் அனைத்தும் கருத்தை மையமாகக் கொண்டுதான் இருக்கும். மேலும் கமலும் பொதுவாக அந்த மாதிரி படங்கள் தான் தேர்வு செய்வார்.

Also read: அக்கட தேசத்து ஹீரோவுடன் கூட்டணி போடும் வெற்றிமாறன்.. பாலாவை போல் சூர்யாவை கழட்டிவிட்ட சோகம்

அந்த வகையில் இவர்கள் இருவரும் சேர்வது ஒரு வெற்றி கூட்டணியாக தான் அமையும். சமீபத்தில் எச்.வினோத் இயக்கத்தில் வெளிவந்த துணிவு திரைப்படமும், கடந்த வருடம் கமல் நடிப்பில் வெளிவந்த விக்ரமும் திரைப்படமும் இவர்களுக்கு மிகப் பெரிய வெற்றியை கொடுத்தது.

இந்த வெற்றியை தொடர்ந்து இவர்கள் அடுத்த வெற்றியை கொடுப்பதற்காக தயாராக இருக்கிறார்கள். மேலும் இது எச் வினோத்திற்கு கிடைத்த மிகப்பெரிய ஜாக்பாட். இவருக்கு கிடைத்த வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி வெற்றி படத்தை கொடுப்பார். இந்த படத்திற்கான அறிவிப்பு கூடிய விரைவில் மிகப் பெரிய பிரம்மாண்ட முறையில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Also read: எச்.வினோத்தை பார்த்து எப்படி பேசணும்னு கத்துக்கோங்க.. தில் ராஜை அசிங்கப்படுத்திய சம்பவம்

Trending News