சிவாஜி கணேசனுக்கு பிறகு நடிப்பில் பெயர் வாங்கிய நடிகராக வலம் வருபவர் தான் உலக நாயகன் கமலஹாசன். சினிமாவிலிருந்து தற்போது அரசியலுக்கு போய் வெற்றியின் விளிம்பு வரை தொட்டு வந்தவர். சாதாரண நடிகர்களுக்கே சினிமாவில் காதல் கிசுகிசுக்கள் வருகிறது. அப்படி இருக்கும்போது கமலஹாசனுக்கு வரவில்லை என்றால் எப்படி.
அதிலும் காதல் மன்னன் வேறு. அப்படி கமல்ஹாசன் சினிமா வாழ்க்கையில் கிசுகிசுக்கப்பட்ட 6 நடிகைகளைப் பற்றி தான் பார்க்க போகிறோம். அதில் முதலாவதாக இடம் பெறுபவர் ஸ்ரீவித்யா. கமலின் ஆரம்ப காலகட்டங்களில் அவருடன் ஜோடி சேர்ந்து நடித்தவர். அதன் பிறகு அவருக்கே அம்மாவாக நடித்துவிட்டார்.

கமல்ஹாசனின் இரண்டாவது காதலியாக வந்தவர் தான் நடிகை சிம்ரன். கமலும் சிம்ரனும் தொடர்ந்து சில படங்களில் ஜோடியாக நடித்ததால் இருவருக்குள்ளும் காதல் கிசுகிசு என கோலிவுட்டில் செய்திகள் கிளம்பியது.

அதனைத் தொடர்ந்து விருமாண்டி படத்தில் ஜோடியாக நடித்த அபிராமி தான் மூன்றாவது காதலியாக கிசுகிசுக்கப்பட்டார். விருமாண்டி படத்தில் இருவருக்குள்ளும் உள்ள ரொமான்ஸ் காட்சிகளே அவர்களது காதலை வெளிச்சம் போட்டு காட்டியதாக அப்போதே பத்திரிகைகளில் எழுதினர்.

அதன்பிறகு கமலஹாசன் நடிகை கவுதமியை நான்காவது காதலியாக ஏற்றுக்கொண்டு கிட்டத்தட்ட பல வருடங்கள் அவருடன் தாலி கட்டாமலேயே குடும்பம் நடத்தி வந்தார். சமீபத்தில் கமல்ஹாசன் கெளதமியை விட்டுப்பிரிய அடுத்ததாக வந்து சேர்ந்தவர்தான் பூஜாகுமார்.


விஸ்வரூபம் படத்தின்போது இருவருக்குள்ளும் விவகாரமான விஷயங்கள் ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்தது. அதைப்போல் உத்தம வில்லன் படத்தில் நடித்தபோது ஆண்ட்ரியாவுக்கும் கமல் மீது காதல் ஏற்பட்டதாக கூறினர். ஆகமொத்தத்தில் ஆண்டவர் சுயசரிதையில் இந்த ஆறு நடிகைகளும் முக்கிய பங்கு வகிப்பார்களாம்.

இதில் சில விஷயங்கள் வதந்தியாக இருந்தாலும் பல விஷயங்கள் உண்மை என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று. இதுபோக கமல்ஹாசனுக்கு வாணி கணபதி மற்றும் சரிகா என்ற இரண்டு மனைவிகள் இருந்தனர்.