வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

Indian 2: அடக்கடவுளே தள்ளி போகும் இந்தியன் 2 ரிலீஸ்.. அப்ப விடாமுயற்சி அவ்வளவு தானா

Indian 2: கமல் நடிப்பில் விக்ரம் படம் வெளியாகி சில வருடங்கள் கடந்து விட்டது. அதனாலேயே இந்தியன் 2 படத்தை ரசிகர்கள் பெரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

சமீபத்தில் கூட இப்படம் ஜூன் மாதம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது பார்த்தால் அந்த ரிலீஸ் தள்ளிப் போகும் நிலையில் இருக்கிறதாம்.

ஏனென்றால் தமிழ் உட்பட பல மொழிகளில் இப்படம் வெளியாகிறது. அதற்கான வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தாமதமாகும் இந்தியன் 2 ரிலீஸ்

அதெல்லாம் முடிந்து படம் ரிலீஸ் ஆக இன்னும் கொஞ்சம் காலதாமதம் ஏற்படுமாம். அதனால் படத்தை ஆகஸ்ட் மாதம் வெளியிடலாம் என தயாரிப்பு தரப்பு முடிவெடுத்துள்ளது.

ஆனால் ஆகஸ்ட் 15 புஷ்பா 2 வெளியாகிறது. தற்போது அதற்கு தெலுங்கு போல் மற்றும் மொழிகளிலும் மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருக்கிறது.

தியேட்டர் உரிமையாளர்கள் கூட இதை வைத்து லாபம் பார்க்க திட்டமிட்டுள்ளனர். அதனால் இந்தியன் 2 படத்தை எப்போது ரிலீஸ் செய்யலாம் என்ற குழப்பத்தில் லைக்கா இருக்கிறது.

இப்படம் வெளியாகி வரும் லாபத்தை வைத்து தான் அவர்கள் விடாமுயற்சியை ஆரம்பிக்க வேண்டும். இப்படி பல சிக்கல்கள் இருக்கும் நிலையில் ஜூலை மாதம் படம் வெளியாகவும் வாய்ப்பிருப்பதாக கோடம்பாக்கத்தில் பேசப்பட்டு வருகிறது.

Trending News