வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இந்தியன் 2 படத்தை ரிலீஸ் பண்ண கூடாது.. சிக்கலில் லைக்கா, இது என்ன வர்ம கலை சேனாபதிக்கு வந்த சோதனை

Indian 2: வாழ்க்கையில பிரச்சனை வரலாம் ஆனா பிரச்சனையே வாழ்க்கையா வந்தா என்னதான் பண்றது. இந்த வசனம் இந்தியன் 2 படத்துக்கு பக்காவாக பொருந்தும். ஏழு வருடமாக இதோ அதோ என்று இழுத்தடித்து வந்த படம் இப்போதுதான் ரிலீசுக்கு தயாராகி இருக்கிறது.

இதற்காக பல முயற்சிகளை மேற்கொண்ட தயாரிப்பு தரப்பு ப்ரமோசனையும் ஜோராக செய்து வருகின்றனர். ஆனால் இப்போது இந்தியன் 2 படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சங்கர், கமல் கூட்டணியில் உருவாகும் இப்படத்தை முதலில் லைக்கா தயாரித்தது. அதன் பிறகு உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனமும் இந்த தயாரிப்பில் இணைந்தது. இப்படியாக பல பிரச்சனைகளை கடந்து இந்தியன் 2 வரும் 12ஆம் தேதி ரிலீசுக்கு தயார் நிலையில் உள்ளது.

ஆனால் மதுரையைச் சேர்ந்த வர்மக்கலை ஆசான் ராஜேந்திரன் இதற்கு தடை கோரி வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் அவர் நாங்கள் கடந்த 55 வருடங்களாக வர்ம கலை தற்காப்பு பயிற்சிகளை அளித்து வருகிறோம். 1996ல் வெளியான இந்தியன் படத்துக்காக கமலுக்கு நான் வர்மக்கலை பயிற்சி கொடுத்தேன்.

கமலுக்கு வந்த பிரச்சினை

அது ரொம்பவும் ரகசியமான கலை என்பதால் படத்தின் டைட்டில் கார்டில் என் பெயர் போடப்பட்டது. ஆனால் தற்போது இந்தியன் 2 படத்தில் நான் ஏற்கனவே சொல்லிக் கொடுத்த முத்திரைகளை பயன்படுத்தி இருக்கின்றனர். இதற்காக என்னிடம் அனுமதி பெறவில்லை.

மேலும் இந்த படத்திலும் என்னுடைய பெயரை டைட்டில் கார்டில் சேர்க்க வேண்டும் என நோட்டீஸ் அனுப்பினேன். அதற்கும் பதில் இல்லை. இதற்கு தகுந்த விளக்கம் வேண்டும். அதுவரை படத்தை வெளியிடக் கூடாது என குறிப்பிட்டுள்ளார்.

படம் வெளிவருவதற்கு நாளை ஒரு நாள் மட்டுமே இருக்கும் நிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது சங்கர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் இரண்டு வார அவகாசம் கேட்டுள்ளார்.

அதை விசாரித்த நீதிபதி லைக்கா மற்றும் கமல் தரப்பிலிருந்து வழக்கறிஞர்கள் நாளை ஆஜராகி பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். இல்லை என்றால் அவர்கள் தரப்பு வாதத்தை கேட்காமலேயே உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

12ம் தேதி இந்தியன் 2 வெளியாகுமா.?

Trending News