ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால், சித்தார்த், ரகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஏற்கனவே ஒப்பந்தமாகி இருந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது பிப்ரவரி 19-ம் தேதி 2022 ஆம் ஆண்டில் அன்று இரவு நேரத்தில் சென்னை அருகே உள்ள தனியார் ஸ்டுடியோவில் அமைக்கப்பட்ட படப்பிடிப்புத் தளத்தில் ஏற்பட்ட விபத்தில் மூன்று நபர் உயிரிழந்ததை தொடர்ந்து அந்தப் படம் அதன் பிறகு தொடராமல் கிடப்பில் போடப்பட்டது.
இந்த விபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு லைக்கா நிறுவனம் 2 கோடியும். கமலஹாசன் 1 கோடியும் இயக்குனர் ஷங்கர் 1 கோடியும் நிவாரணம் வழங்கினாலும் மேற்கொண்டு படத்தை எப்போது துவங்குவார்கள் என யாருக்குமே தெரியாமல் இருந்தது. ஆனால் தற்போது விக்ரம் படத்திற்குப் பிறகு இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பை மீண்டும் துவங்கலாம் என்று லைக்கா நிறுவனம் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.
மேலிடத்தில் இருந்து இந்தியன் 2 பிரச்சனைகளை தீர்த்து வைத்து விட்டார்கள். நின்றுபோன படத்தை எல்லாம் தூசி தட்டி விக்ரம் படத்திற்கு விக்ரம் படத்தின் போட்டியாக பிசினஸ் ஆக்குவதற்காக வேறு லெவலில் யோசிக்கிறார். இப்பொழுது பழைய இந்தியன் 2 பட பிரச்சினைகளை தீர்த்து வைத்தால் தான் அந்தப் படத்தின் சூட்டிங் மீண்டும் ஆரம்பிக்க முடியும் என்பதை தெரிந்துகொண்ட மேலிடம் அதனை தீர்த்து வைத்து விட்டது.
இந்த ஆண்டில் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் இந்தப்படத்தின் ஷூட்டிங் நடக்க இருக்கிறதாம். இனிமேல் இந்த படத்தின் சூட்டிங்கை ஒழுங்காக நடத்தினால் சரி. பழைய பிரச்சனைகளை தோண்டினால் கமலும் அவர் பங்குக்கு புது தந்திரத்தை கையில் எடுத்து விடுவார் என்று வாயை மூடிக் கொண்டே இருக்கிறார்கள்.
கடந்த காலத்தை நினைவுபடுத்தும் வகையில் கமலிடம் , உங்களால் இவ்வளவு செலவாகியது, இவ்வளவு வட்டி அதிகமாகியது, இவ்வளவு உங்களுக்கு அட்வான்ஸ் கொடுத்தோம், நீங்கள் அதை திருப்பித் தரவில்லை என்றெல்லாம் அவர்கள் ஆரம்பித்து விட்டால் அதற்கு கமலிடம் மாற்று பதில் உள்ளது.
கமலும் விக்ரம் படம் எனக்கு வேற ஒரு பிசினஸை கொடுத்துவிட்டது. அதனால் லாபத்தில் இவ்வளவு பங்கு வேண்டும் என்று ஆரம்பித்து விடுவார். அதனால் பஞ்சாயத்தை சுமுகமாக முடித்து வைத்து விட்டு இந்த படத்தின் வேலைகளை ஆரம்பித்தார் சரி.