திங்கட்கிழமை, நவம்பர் 18, 2024

ஆணவத்துடன் பேசி குருவை அவமானப்படுத்திய கமல்.. ஒட்டும் வேண்டாம், உறவும் வேண்டாம் என ஒதுங்கிய பாலச்சந்தர்

உலக நாயகனாக புகழின் உச்சியில் இருக்கும் கமல்ஹாசனை சினிமாவில் இந்த அளவுக்கு வளர்த்து விட்ட பெருமை பாலச்சந்தரையே சேரும். இதை கமல் கூட பல மேடைகளில் வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார். இவர்கள் இருவரின் கூட்டணியில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தும் ரசிகர்களை பெருமளவில் கவர்ந்தது.

ஆனால் கமல் தன்னை அவமானப்படுத்திய ஒரே காரணத்தால் பாலச்சந்தர் இனிமேல் அவரை வைத்து படம் இயக்க மாட்டேன் என்று கடைசி வரை பிடிவாதமாக இருந்திருக்கிறார். இந்த விஷயம் பலருக்கும் தெரிய வாய்ப்பில்லை. அதாவது பாலச்சந்தர் கமலை வைத்து உன்னால் முடியும் தம்பி என்ற திரைப்படத்தை இயக்கினார். 1988 ஆம் ஆண்டு வெளிவந்த இந்த திரைப்படத்தில் கமல், ஜெமினி கணேசன், சீதா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

Also read: முதல் முறை ஒரு நடிகனாக கமல் வாங்கிய சம்பளம்.. 35 நாட்களுக்கு இவ்வளவுதானா? இயக்குனருடன் போட்ட சண்டை

இந்தப்படம் சூட்டிங் நடந்து கொண்டிருந்த சமயத்தில் கமல் அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திலும் நடித்து வந்தார். சங்கீதம் சீனிவாச ராவ் இயக்கிய இந்த படத்திற்கு கமல் தான் திரைக்கதை எழுதியிருந்தார். இதனால் கமல் படு பிஸியாக இருந்திருக்கிறார். ஆனால் உன்னால் முடியும் தம்பி திரைப்படத்திற்கு கமல் நான்கு நாட்கள் தேதி கொடுத்தால் ஷூட்டிங் முடிந்து விடும் என்ற நிலைமை. அதற்காக பாலச்சந்தர் கமலிடம் கேட்டும் கூட அவரிடம் இருந்து சரியான பதில் கிடைக்கவில்லை.

பொறுத்து பொறுத்து பார்த்த இயக்குனர் தன் உதவியாளர்களை கமலை சந்திக்க அனுப்பி வைத்திருக்கிறார். அவர்களும் கமலிடம் இது பற்றி பேசி இருக்கின்றனர் அப்போது அவர் பேசிய பேச்சு பாலச்சந்தரை மிகுந்த மன வருத்தத்திற்கு ஆளாக்கி இருக்கிறது. அதாவது கமல், அவரே வயலும் வாழ்வும் மாதிரி படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார், என்னால் இப்பொழுது அதில் வந்து நடிக்க முடியாது என்று ஆணவத்துடன் பேசி இருக்கிறார்.

Also read: கமல், ரஜினியின் குருவுக்கே இந்த நிலைமையா.? கே பாலச்சந்தர் பார்த்து பதறும் பழம் தின்னு கொட்டை போட்ட நடிகர்

இதைக் கேட்ட பாலச்சந்தர் உடைந்து போய் இருக்கிறார். அதன் பிறகு எப்படியோ கமல் வந்து நடித்துக் கொடுக்க அந்த படமும் முடிவடைந்து இருக்கிறது. பின்னர் பாலச்சந்தர் கமலுக்கு மிகப்பெரிய மாலையை அணிவித்து இதுவே நான் உன்னை இயக்கும் கடைசி படம். இனிமேல் நாம் இணைந்து படம் செய்ய முடியாது என்று திட்டவட்டமாக கூறியிருக்கிறார். இதை கேட்டு அதிர்ந்து போன கமல் தெரியாமல் பேசி விட்டேன் என்று மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

ஆனால் பாலச்சந்தர் தன்னுடைய முடிவில் உறுதியாக இருந்திருக்கிறார். அதிலிருந்து அவர் கமலை வைத்து எந்த படத்தையும் இயக்கவில்லை பாலச்சந்தரின் தயாரிப்பில் கமல் சில திரைப்படங்களில் நடித்திருக்கிறாரே தவிர அவருடைய இயக்கத்தில் நடிக்கவில்லை. ஆனால் பாலச்சந்தர் இயக்கிய பார்த்தாலே பரவசம் என்ற திரைப்படத்தில் மட்டும் கமல் ஒரு கௌரவத் தோற்றத்தில் நடித்திருந்தார். சில வருடங்களில் பாலச்சந்தர் கமலுடன் சகஜமாக பழகினாலும் கமலை இயக்கக் கூடாது என்ற உறுதி மட்டும் அப்படியே இருந்திருக்கிறது.

Also read: எப்பவுமே கமல் தான் மாஸ், 10 வருஷத்துல ரஜினி எல்லாம் ஒண்ணுமே இல்ல.. சர்ச்சையை கிளப்பிய பிரபலம்

- Advertisement -spot_img

Trending News