வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கமலால் 5 கோடியை இழந்த விசுவாசி.. ஆனாலும் வெறுத்து ஒதுக்க இப்படி ஒரு காரணமா?

கமல்ஹாசன் நடிகர், அரசியல்வாதி என பன்முகத்தன்மை கொண்டவர். தற்போது பிக் பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். கமல் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கும் போது அவருடன் சில விசுவாசிகள் மட்டுமே பக்கபலகமாக இருந்தனர்.

ஆகையால் தான் கடந்த தேர்தலில் மூன்றாவது இடத்தை கமலால் பிடிக்க முடிந்தது. கமல் கட்சி தொடங்கிய முதல் நாளில் இருந்தே அவருடன் ஒருவர் பயணித்து வந்தார். ஆனால் இப்போது இவர்கள் இடையே மிகப்பெரிய விரிசல் விழுந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read : ரத்தம் வராமல் வார்த்தைகளால் அடிக்க போகும் கமல்.. ரணகளமாகும் பிக் பாஸ் வீடு

அதாவது கமல்ஹாசன் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் போது அதில் போட்டியாளராக பங்கு பெற்றவர் கவிஞர் சினேகன். அப்போது கமலுடன் ஏற்பட்ட நெருக்கம் காரணமாக அவருடனே தொடர்ந்து சினேகன் பயணித்து வந்தார். அதுமட்டுமின்றி அவருடைய கட்சியிலும் சினேகனுக்கு முக்கிய பொறுப்பு கொடுக்கப்பட்டது.

இந்நிலையில் சமீபத்தில் கமல் தனது பிறந்த நாளை கொண்டாடும்போது தொண்டர்கள் மற்றும் ரசிகர்கள் யாரும் மாலை, பூ கொத்து, அன்பளிப்பு போன்றவை எடுத்து வர வேண்டாம் என கேட்டுக்கொண்டார். ஆனால் அதையும் மீறி சினேகன் தனது மனைவி கனிகாவுடன் பூங்கொத்து கொடுத்து கமலுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

Also Read : எல்லாத்துலயும் மூக்கை நுழைக்கும் கமல்.. ஹேண்டில் பண்ண முடியாமல் வெறுத்த பாலா

அதுமட்டுமின்றி அவருடன் புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டார். இதனால் கமலுக்கு சினேகன் மீது கடும் கோபம் ஏற்பட்டுள்ளது. ஆகையால் சினேகனுடன் கமல் பேசுவதில்லையாம். இதையே நினைத்து நினைத்து தற்போது சினேகன் புலம்பி வருகிறாராம். கட்சியிலிருந்தே விலகிவிடலாம் என்ற முடிவு எடுக்கும் அளவுக்கு மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளாராம்

கடந்த தேர்தலிலேயே வேறு கட்சியினர் சினேகனை தனது கட்சிக்கு வருமாறு, 5 கோடி பணம் தருவதாக கூறியுள்ளனர். ஆனால் கமல் மீது உள்ள பிரியத்தால் சினேகன் அதையெல்லாம் உதாசீனப்படுத்தினார். இப்படிப்பட்ட விசுவாசியை கமல் ஒருமுறை மன்னிக்கலாம் என பலரும் கூறி வருகிறார்கள்.

Also Read : ரஜினிக்கு 3 பெக்கில் ஏறாத போதை.. தெளிய தெளிய அடித்த கமல் கதாபாத்திரம்

Trending News