புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

புலிக்கு வாலாக இருப்பதை விட பூனைக்கு தலையாக இருக்கலாம்.. கமல் கூப்பிடும் வர மறுத்த ஜாம்பவான்

புலிக்கு வாலாக இருப்பதை விட பூனைக்கு தலையாக இருக்கலாம் என்ற பழமொழியை நாம் கேட்டிருப்போம். அதன்படி தான் கமலே தனது படத்தில் வாய்ப்பு தருவதாக சொல்லியும் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று ஒரு நடிகர் கூறியது மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அதாவது உலக நாயகன் படத்தில் ஒரு காட்சியிலாவது நடித்து விட வேண்டும் என்பது பலரது ஆசை. அப்படி தான் லோகேஷிடம் கெஞ்சி கேட்டு விக்ரம் படத்தில் வில்லன் கதாபாத்திரத்தை பெற்றார் விஜய் சேதுபதி. இதே போல் பல நடிகர்கள் கமல் படத்தில் நடிக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார்கள்.

Also Read : அம்மாவின் இறுதி சடங்கில் கொந்தளித்த கமல்.. நட்பை விட்டுக் கொடுக்காமல் செய்த தரமான சம்பவம்

அப்படி இருக்கையில் கமல் தனது விக்ரம் படத்தில் ஆர் ஜே பாலாஜியை நடிக்க கூப்பிட்டு உள்ளார். அப்போது அவர் ஏதோ காரணம் சொல்லி மறுத்ததால் இந்தியன் 2 படபிடிப்பிலும் மீண்டும் ஆர் ஜே பாலாஜியை கமல் கூப்பிட்டுள்ளார். ஆனால் இந்த படத்தில் நடிக்கவும் மறுத்துவிட்டாராம்.

பெரிய இயக்குனரான ஷங்கர், லைக்கா, கமல் கூட்டணியில் ஒரு படம் உருவாகிறது என்றால் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும். அப்படிப்பட்ட இந்தியன் 2 படத்தின் வாய்ப்பை ஆஜே பாலாஜி மறுத்ததற்கான காரணம் தான் ஆச்சரியத்திற்குரியது. அதாவது புலிக்கு வாலாக இருப்பதில் தனக்கு விருப்பமில்லை என்று ஆர் ஜே பாலாஜி கூறியுள்ளராம்.

Also Read : ஜகா வாங்கும் கமல்.. பொன்னியின் செல்வனால் வேற டிராக்கில் பயணிக்க போகும் உலகநாயகன்

சின்ன பட்ஜெட் படமாக இருந்தாலும் அதில் ஹீரோவாக நடிக்க தான் எனக்கு விருப்பம். ஆகையால் எவ்வளவு பெரிய நடிகரின் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அது தனக்கு தேவை இல்லை என்று பாலாஜி கூறியுள்ளார். மேலும் ஆர்.ஜே பாலாஜி சினிமாவுக்கு வருவதற்கு முன் 80 ஆயிரம் சம்பளத்தில் தனியார் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது.

ஆனால் ரேடியோ ஜாக்கி தான் தனக்கு பிடித்திருக்கிறது என்ற காரணத்தினால் ஆர் ஜேவாக 30 ஆயிரம் சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இதிலிருந்தே தெரிகிறது ஆர்.ஜே பாலாஜி மற்றவர்களுக்காக இல்லாமல் தனக்கு பிடித்த வேலை மட்டுமே செய்து வெற்றிக்கான கூடியவர்.

Also Read : கமலுக்கு முன்பே சிம்ரனுடன் கிசுகிசுக்கப்பட்ட ஹீரோ.. செம கெமிஸ்ட்ரியில் வெளிவந்த 4 படங்கள்

Trending News