திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கமல் என்சைக்ளோபீடியானு சும்மா சொல்லல.. அவர் தொடாத இடமே இல்ல, ஆல்ரவுண்டராக இருக்க முக்கியமான 9 காரணங்கள்

Actor Kamal: உலக நாயகன் கமலஹாசனை என்சைக்ளோபீடியா என்றுதான் பலர் கூறி வருகிறார்கள். அப்படி என்ன இவர் எல்லாம் தெரிந்து கைதேர்ந்தவரா என பலரும் விமர்சிப்பதுண்டு. ஆனால் பொதுவாக ஒரு மனிதர் பல திறமைகளை வைத்திருப்பது விசித்திரமான ஒன்றுதான்.

அதில் கமல் அளவுக்கு சில நபர்கள் மட்டும்தான் இருப்பார்கள். ஏனென்றால் குழந்தையிலிருந்து சினிமாவில் ஊறிப் போனவர் தான் கமல். ஆகையால் இதில் அ முதல் ஃ வரை அனைத்தையும் கரைத்து குடித்து இருக்கிறார். இதனால் சினிமாவில் அவர் தொடாத இடமே இல்லை என்ற அளவுக்கு சில விஷயங்களை செய்திருக்கிறார்.

Also Read : முரட்டு நடிகரையே பிஆர்ஓ ஆக மாற்றிய லோகேஷ்… ஓவர் துதி பாடும் கமல் நண்பர்

அதாவது கமல் ஒரு மகா நடிகர் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம்தான். அதில் முதலாவதாக கமல் நடிகனாக 232 படங்களில் நடித்திருக்கிறார். அதுமட்டுமின்றி கமலின் படங்கள் காலம் கடந்தும் பேசப்படும். இதற்கு எடுத்துக்காட்டாக சமீபத்தில் வெளியான வேட்டையாடு விளையாடு படத்தின் ரீ ரிலீஸை கூட சொல்லலாம்.

அடுத்ததாக சிறந்த இயக்குனர் என்பதை நிரூபிக்கும் விதமாக கமல் ஐந்து படங்களை இயக்கி இருக்கிறார். தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் கிட்டத்தட்ட 26 படங்களை தயாரித்திருக்கிறார். இப்போதும் இளம் நடிகர்களை வைத்து படம் தயாரிக்க ஆர்வமாக இருக்கிறார். நான்காவதாக கமல் ஒரு சிறந்த பாடகர் என்பதை யாராலும் மறுக்க முடியாது.

Also Read : எந்த நடிகர்களிடம் பார்க்காத கமலின் 6 அதிசய குணங்கள்.. 5 வயதில் சம்பளமாக எத கேட்டார் தெரியுமா.?

அதன்படி 107 பாடல்கள் பாடியிருக்கிறார். திரைக்கதை எழுத்தாளராக 36 படங்களில் பணியாற்றி இருக்கிறார். ஆறாவதாக பாடலாசிரியராக கிட்டத்தட்ட 22 பாடல்கள் எழுதி இருக்கிறார். மேலும் கமல் ஒளிப்பதிவாளராகவும் 7 படங்களில் வேலை செய்துள்ளார். இவ்வாறு சினிமாவை பொறுத்தவரையில் ஆல்ரவுண்டராக இருந்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி சின்னத்திரையிலும் இறங்கி பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி சிறந்த தொகுப்பாளர் என்ற பெயரையும் வாங்கி விட்டார். இன்னும் தொடாத இடம் அரசியல் என்றால் அதையும் ஒரு கை பார்க்கலாம் என்று மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை தொடங்கி விட்டார். இதனால்தான் கமலை என்சைக்ளோபீடியா என பலரும் கூறி வருகிறார்கள்.

Also Read : அஜித் நிஜத்தில் மிகப்பெரிய பிராடு.. என்ன இப்படி சொல்லிட்டாரு? கண்டபடி திட்டிய கமலின் வெற்றி தயாரிப்பாளர்

Trending News