புதன்கிழமை, ஜனவரி 15, 2025

2024 இல் சாதனை படைக்க போகும் கமல்.. அடுத்தடுத்து வெளியாகும் 2 படங்கள்

Actor Kamal : கமல் இப்போது சினிமாவில் முழுவீச்சாக செயல்பட்டு கொண்டிருக்கிறார். ஆனாலும் விக்ரம் படத்திற்கு பிறகு அவரது நடிப்பில் படங்கள் எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. மேலும் விக்ரம் படம் இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்தாலும் அடுத்தடுத்த படங்களின் ரிலீஸுக்காக ஆண்டவர் ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு கமலின் ஆண்டாக தான் இருக்க போகிறது. அதாவது ஒருபுறம் கமல் தனது ராஜ் கமல் நிறுவனத்தின் மூலம் நிறைய படங்களை தயாரித்துக் கொண்டிருக்கிறார். அந்த படங்களில் சில இந்த ஆண்டு வெளியாக இருப்பதால் அதன் மூலம் கமல் கல்லா கட்ட இருக்கிறார்.

மற்றொருபுறம் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் உருவாகி வரும் இந்தியன் 2 கிட்டதட்ட பல வருடங்களாக எப்போது வரும் என ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு சம விருந்தாக இந்த வருடம் இந்தியன் படத்தில் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்கள் வெளியாக இருக்கிறது.

Also Read : காமெடியில் பட்டையை கிளப்பிய 5 நடிகைகள்.. கத்துக்கொடுத்த குருவையே ஹீரோயின் ஆக்கிய கமல்

இவ்வாறு ஒரே வருடத்தில் இந்தியன் படத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் பாகங்கள் வெளியானால் அதுவே தமிழ் சினிமாவில் ஒரு சாதனையாக மாறும். அதாவது இந்தியன் 2 படப்பிடிப்பின் போது ஷங்கர் அதிக காட்சிகளை படமாக்கி இருக்கிறாராம்.

மேலும் எடிட்டிங் வேலை செய்யும் போது தான் படத்தில் நிறைய காட்சிகளை கட் செய்யும்படி இருந்திருக்கிறது. அதன் பிறகு ஷங்கர் யோசித்து இதை இரண்டு பாகங்களாக வெளியிடலாம் என்று முடிவுக்கு வந்திருக்கிறார். கடந்த வருடம் கமலின் படங்கள் வெளியாகாத நிலையில் இந்த வருடம் இரண்டு பாகங்களும் வெளியாவது கமல் ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

Also Read : பாதி கூட நிறையல, காத்து வாங்கிய இருக்கைகள்.. ரஜினி, கமல் வந்தும் வெறிச்சோடி போன கலைஞர் 100

Trending News