வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

கமல் தயாரிப்பில் கல்லா கட்ட போகும் 6 படங்கள்.. அஜித் கழட்டி விட்டதால் கூப்பிட்டு பட வாய்ப்பு கொடுத்த ஆண்டவர்

Rajkamal Films International: அஜித், விடமுயற்சி படத்தை மேற்கொள்ள தயாராகிவிட்டார் என பேச்சு நிலவும் நிலையில், ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாக இருந்த படம் தாமதம் ஏற்பட்டதால், அப்படத்தை நிராகரித்தார். அதைத்தொடர்ந்து கமல் விக்னேஷ் சிவனுக்கு வாய்ப்பு கொடுத்த தகவலை பற்றி இங்கு காண்போம்.

அவ்வாறு இருக்க, கமல் தற்பொழுது இந்தியன் 2 படப்பிடிப்பை முடித்து உள்ள நிலையில், அதன் பின் தன் அடுத்த கட்ட பட வாய்ப்புகளில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் இவரின் ராஜ் கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பில் அடுத்தடுத்து பல படங்கள் வர போவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Also Read: வளர்த்து விட்டவரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.. விஜய்க்கு மண்டையில் கொட்டுவைத்து புத்திமதி சொன்ன தயாரிப்பாளர்

அவ்வாறு எஸ் கே 21 – சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிக்க இருக்கும் படத்தை ராஜ்கமல் ஃபிலிம் தயாரிக்க உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பினை காஷ்மீரில் எடுத்த திட்டமிட்டதாகவும் அதன் பின் அதை ட்ராப் அவுட் செய்ததாகவும் கூறப்படுகிறது. அதை தொடர்ந்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் எஸ் டி ஆர் 48 படத்தையும் கமல் தயாரிக்க உள்ளார்.

இதை குறித்து சிம்பு தன் கனவு நினைவாக போகிறதாகவும் கூறி வருகிறார். அதைத்தொடர்ந்து 35 வருடத்திற்கு பிறகு இணையும் கூட்டணியாக மணிரத்னம் -கமல் மேற்கொள்ளும் படம் தான் கே ஹெச் 234. இதன் படப்பிடிப்பு குறித்த பேச்சு வார்த்தை சென்று கொண்டிருக்கிறது. மேலும் இப்படத்தில் திரிஷா நடிக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read: கல்யாணத்தை வைத்து கல்லா கட்ட நினைத்த தூங்கும் ஸ்டார்.. புளியங்கொம்பை பார்த்து புடிச்ச அஸ்வின்

அதைத்தொடர்ந்து லவ் டுடே வின் நாயகனான பிரதீப் ரங்கராஜன், விக்னேஷ் சிவன் இயக்கத்தில் மேற்கொள்ளும் எல் ஐ சி படத்தையும் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தான் தயாரிக்க உள்ளது. ஏற்கனவே விக்னேஷ் சிவன் இப்படம் குறித்த கதையை தாமதித்ததால், அஜித் படத்தை நிராகரித்ததாக கூறப்படுகிறது.

அதை தொடர்ந்து பிரம்மாண்டமாக அதிக பட்ஜெட்டில் சிம்பு நடிப்பில் ராஜ் கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மேற்கொள்ளும் படம் தான் எஸ் டி ஆர் 50. மேலும் இப்படத்தின் படப்பிடிப்பை விரைவில் தொடங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதன்பின் ரஜினியின் ஜெய்லர் படத்தை தொடர்ந்து, நெல்சன் தனுஷை வைத்து படம் மேற்கொள்ள போவதாகவும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. இதையும் ராஜ்குமார் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பை மேற்கொள்கிறதாம்.

Also Read: சூறாவளியாக வசூலில் வேட்டையாடி வரும் மாவீரன்.. 5 நாளிலே பண மழையில் ஃபேன்டசி தயாரிப்பாளர்

Trending News