Kamal-Pradeep: யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சியின் டிஆர்பி இப்போது எகிறி கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணம் சில தினங்களுக்கு முன்பு ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்ட பிரதீப் தான். தன் தரப்பு நியாயத்தை கூட எடுத்து வைக்க முடியாமல் அவர் வீட்டை விட்டு சென்றது இப்போது கடும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
அதைத்தொடர்ந்து தற்போது அவருக்கு ஆதரவாக சோசியல் மீடியாவில் ரசிகர்கள் ஒன்று திரண்டுள்ளனர். ஒவ்வொரு நாளும் புதுப்புது ஹேஷ் டேக்குகளை உருவாக்கி ட்ரெண்ட் செய்து கமல் மீது தங்களுக்கு இருக்கும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன்படி தற்போது பிரதீப் விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது.
அவர் மீது வெறுப்பு கொண்டிருந்த ரசிகர்கள் கூட இப்போது ஆதரவை தெரிவித்து வரும் அளவுக்கு சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அதே சமயம் கமலுக்கு எதிரான கருத்துக்களும் கிளம்பியுள்ளது. இதனால் ஆடிப்போன ஆண்டவர் இந்த விவகாரத்தில் நிச்சயம் ஒரு சுமூகமான முடிவை எடுக்க வேண்டும் என்ற ஆலோசனையில் இறங்கியுள்ளாராம்.
Also read: 80% வாக்குகளை கைப்பற்றிய போட்டியாளர்.. அவமானப்பட்டு பிக்பாஸை விட்டு வெளியேறப் போவது இவர் தான்
அப்படி பார்த்தால் பிரதீப் எப்போது வேண்டுமானாலும் நிகழ்ச்சிக்குள் வரலாம் என்கிறது சின்னத்திரை வட்டாரம். ரசிகர்களும் அதையே தான் விரும்புகின்றனர். அதனாலயே இப்போது Bring Back Pradeep என்ற ஹேஷ் டேக் ட்ரண்ட் ஆகி வருகிறது. அதைத்தொடர்ந்து விஜய் டிவியும் இப்போது அதற்கான வேலையில் சத்தம் இல்லாமல் இறங்கியுள்ளதாம்.
இப்படி பெரும் அமளி துமளியான இந்த விவகாரத்தில் பிரதீப்பின் நிலைப்பாடு வேறு மாதிரியாக இருக்கிறது. அதாவது கமலே கூப்பிட்டாலும் இனிமேல் இந்த நிகழ்ச்சிக்குள் வரமாட்டேன் என்று அவர் தற்போது முடிவெடுத்துள்ளாராம். இதை அவருக்கு நெருங்கிய வட்டாரங்கள் தெரிவித்து வருகின்றன.
ஆனால் மிகப்பெரும் எழுச்சியாக மாறியிருக்கும் இந்த விஷயம் விஜய் டிவிக்கு சில பின்னடைவுகளையும் ஏற்படுத்த வாய்ப்பு இருக்கிறது. அதனால் எப்படியாவது பிரதீப்பை சமாதானம் செய்து நிகழ்ச்சிக்குள் அழைத்து வரவும் வாய்ப்பு இருக்கிறது. அது மட்டுமின்றி அவருக்காக ஒரு குறும்படம் போட்டு மக்களின் கோபத்தை தணிக்கவும் ஆலோசித்து வருவதாக ஒரு தகவல் இப்போது தீயாக பரவிக் கொண்டிருக்கிறது.
Also read: மறக்க முடியாத படி அமைந்த பிறந்தநாள்.. இதெல்லாம் தேவையா ஆண்டவரே.!