பாலிவுட்டில் ஷாருக்கான், சல்மான் கான் மாதிரி, டோலிவுட்டில் ராம்சரன், ஜூனியர் என்.டி.ஆர் மாதிரி தமிழ் சினிமாவில் விஜய், அஜித். எப்போதும் அஜித், விஜய் படங்கள்தான் நேருக்கு நேர் மோதியிருக்கின்றன. ஆனால், அவர்கள் எப்போதும் நண்பர்களாகவே பழகி வருகிறார்கள்.
இருப்பினும் அவர்கள் சம்பளம் வாங்கி நடிக்கும் படம் ரசிகர்களின் பொழுதுபோக்குக்காக வெளியானாலும் அப்படத்தின் வசூல், எத்தனை கோடி பட்ஜெட், பாடல், வசனம், பிரமாண்டம், சமூக வலைதளத்தில் எத்தனை லைக், பாடலுக்கு என்ன வியூஸ் இதெல்லாம் வைத்து ரசிகர்கள் சண்டை போட்டு வருவதை பார்த்துக் கொண்டிருந்தான் இருக்கிறோம்.
ஆனால் ஒருவரின் செயல்பாடு, இன்னொருவருக்கும் அப்படியே இருக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை. அதன்படி, விஜய் ஆக்சன் ஃபார்முலாவை பிடித்திருக்கிறார் என்றால் அஜித் நடிப்பு, ஆண்டி ஹீரோ சப்ஜெட்டை விரும்பி தேர்வு செய்து அதில் ஸ்கோர் செய்கிறார்.
இதில் இருவருமே தங்கள் ரசிகர்களை திருப்தி செய்வதால்தான் 30 ஆண்டுகளாக நடித்து வந்தாலும் கடந்த 20 ஆண்டுகளாக முன்னணி நடிகர்களாக பல கோடி சம்பளம் பெற்று ஹிட் படங்களைக் கொடுத்து வருகிறார்கள். அப்படி ஹிட் கொடுப்பதால்தான் தயாரிப்பாளர்களும், இயக்குனர்கள் அவர்களை வைத்து படமெடுத்து, அவர்கள் கேட்கும் சம்பளத்தை கோடி கோடியாய் கொட்டிக் கொடுக்கிறார்கள்.
அஜித்துக்கு பாராட்டு, விஜய்க்கு மெச்சூரிட்டி இல்ல
இந்த நிலையில், பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு, நடிகர் அஜித்தின் செயல்பாடுகளை பாராட்டியும், விஜய்க்கு பக்குவமில்லை என்று பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் கூறியதாவது;
’’சில ஆண்டுகளுக்கு முன்பு அஜித்குமார் தன்னை தல உள்ளிட்ட அடைமொழி வைத்து அழைக்க வேண்டாம் அஜித், அஜித்குமார், ஏகே என்று அழைத்தால் போதும் என்று கூறினார். அதேபோல் ரசிகர்கள் அழைத்து வருகின்றனர். சமீபத்தில் கமல் தன் 70 வது பிறந்த நாளில் ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில் தன்னை இனிமேல் ஆண்டவர், உலக நாயகன், கலைஞானி என்று அடைமொழி வைத்து கூப்பிட வேண்டாம். கமல், கமல்ஹாசன், கே.ஹெச் என்று அழைத்தாலே போதும் என்று கூறிவிட்டார்.
கமலின் மார்க்கெட் இப்போது உச்சத்தில் இருந்தாலும் அவர் இப்போதுதான் மெச்சூரிட்டியாக அடைமொழி வேண்டாம் என்று கூறியிருக்கிறார். இந்த மெச்சூரிட்டி எப்போதோ அஜித்துக்கு வந்துவிட்து. யாரையும் எதிர்பார்காமல் அந்த முடிவு எடுத்ததற்காகவே அவரை பாராட்டலாம். ஆனால் விஜய் சினிமாவுக்கு வந்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டது.
இளைய தளபதியில் இருந்து தளபதி என அடைமொழி வைத்துக் கொண்டிருகிறார். இது மெச்சூரிட்டியா? மெச்சூரிட்டி என்பது வயதிற்கு ஏற்ற செயல்பாடுகளுடன் கூடியதாக இருக்க வேண்டும் என்று, இப்படி அடைமொழி வைப்பதால் அவரை மெச்சூரிட்டியான நடிகர் என கூற முடியாது’’ என தெரிவித்துள்ளார்.
அஜித், கமல், சூர்யா என பலரும் தங்கள் அடைமொழிகளை துறந்துவிட்ட நிலையில், ரஜினி, விஜய், விஜய்சேதுபதி, பிரசாந்த் உள்ளிட்டோர் ஏன் இன்னும் அடைமொழியை பெயரின் முன் வைத்திருக்கிறார்கள்? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.