Actor Kamal: கமல் எப்பொழுதுமே உலக சிந்தனை கொண்டவர். பல புது விஷயங்களை சினிமாவிற்குள் கொண்டு வந்த பெருமையும் அவருக்கு உண்டு. இந்த வயதிலும் அவருக்கு இருக்கும் எனர்ஜி பலரையும் வியக்க வைக்கும். அதனாலயே அவர் உலகநாயகன் என்று போற்றப்படுகிறார்.
அப்படிப்பட்ட கமல் மூன்று நடிகர்களுடன் இணைந்து நடிப்பதற்கு மிகவும் ஆசைப்பட்டிருக்கிறார். அதில் ஒரு நடிகருடன் மட்டும் நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை. அதுவே இன்று வரை அவருக்கு மிகப்பெரிய குறையாகவும், துரதிர்ஷ்டமாகவும் இருக்கிறது.
Also Read : அடுத்தடுத்து இரண்டு படங்களின் ரிலீஸ் தேதியை லாக் செய்த கமல்.. கப் சிப்னு வாலை சுருட்டிக் கொள்ளும் ஹீரோக்கள்
அந்த வகையில் கமலுக்கு நாகேஷ் மற்றும் இயக்குனரும், நடிகருமான மௌலியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்பது மிகப் பெரும் ஆசையாக இருந்திருக்கிறது. அதன்படி இந்த இரு நடிகர்களுடனும் அவர் பணி புரிந்திருக்கிறார். ஆனால் அவர் மூன்றாவதாக நடிக்க ஆசைப்பட்ட நபர் இன்று உயிருடன் இல்லை.
அவருடன் ஒரு படத்திலாவது இணைந்து விட மாட்டோமா என்று கமல் மிகவும் ஆசைப்பட்டிருக்கிறார். அப்படிப்பட்ட ஜாம்பவான் தான் இயக்குனரும், நடிகருமான விசு. நம் தமிழ் சினிமாவுக்கு பல குடும்ப சித்திரங்களை கொடுத்த பெருமை இவருக்கு உண்டு.
Also Read : வெகுளித்தனமாய் பிரபு நடித்த 5 படங்கள்.. ஒரே மாதிரியா.? இழந்த கேரியரை தூக்கி நிறுத்திய கமல்
அது மட்டுமல்லாமல் இவருடைய பேச்சாற்றலும், நடிப்பும் இவருக்கான தனி அடையாளத்தை கொடுத்தது. அதனாலயே கமல் இவருடைய படங்களில் நடிக்க மிகவும் ஆசைப்பட்டார். ஆனால் அதற்கான நேரம் தான் இருவருக்குமே வாய்க்காமல் போய்விட்டது.
இருப்பினும் விசுவின் கதையில் கமல் நடித்திருக்கிறார். அந்த வகையில் 1982 ஆம் ஆண்டு கமல் நடிப்பில் வெளியான சிம்லா ஸ்பெஷல் படத்தின் திரைக்கதையை எழுதியவர் விசு தான். இது மட்டும் தான் இவர்கள் இருவரையும் இணைக்கும் ஒரு விஷயமாக இருக்கிறது. அதன்படி கமல் இந்த ஒரு ஜாம்பவானுடன் இணையாமல் போனது நிச்சயம் வருந்தத்தக்க விஷயம் தான்.
Also Read : ஓஹோ கொரியன் படங்களை காப்பியடிப்பதன் சங்கதி இதுதானா.? கமல் படமே சுட்ட மூவி தான்