வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

இந்தியன் 2  ரிலீஸ்க்கு முன்பே 130 கோடி கலெக்சனுக்கு ரெடியாகும் கமல்.. சங்கரை அனுப்பி வைத்துவிட்டு போட்ட பிளான்

Actor Kamal: லைக்கா மற்றும் ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனங்கள் இணைந்து, சங்கர் இயக்கத்தில் மிக பிரம்மாண்டமாக தயாராகி இருக்கும் படம் தான் இந்தியன் 2. இந்தப் படத்தின் ரிலீசுக்கு முன்பே உலக நாயகன் கமலஹாசன் 130 கோடியை  தட்டி தூக்குவதற்காக தயாராகிக் கொண்டிருக்கிறார்.

தற்போது கமல் மற்றும் சங்கர் இருவரும் இந்தியன் 2 படத்திற்காக அமெரிக்கா சென்றுள்ளனர். அங்கு படத்தில் 30 வயது இளைஞனாக காண்பிப்பதற்காக புதிய டெக்னாலஜி சங்கர் பயன்படுத்துகிறார். இதற்காக பல கோடிகளையும் வாரி இறைத்துள்ளனர்.

Also Read: பிக் பாஸ் 7 ஆவது சீசனுக்கு தயாரான EVP ஃபிலிம் சிட்டி.. ஆனா இந்த வாட்டி ரெண்டு பிக்பாஸ் வீடு!

அதற்கான வேலை முழுவதும் நிறைவடைந்த நிலையில் சங்கர் இப்போது அமெரிக்காவிலிருந்து சென்னை திரும்பி வந்துவிட்டார். ஆனால்  கமல் இந்தியன் 2 படத்தை முடித்துவிட்டு அமெரிக்காவில் ஓய்வில் இருக்கிறார். அவர் அமெரிக்காவிலிருந்து வந்த உடனேயே பிக் பாஸ் சீசன் 7  நிகழ்ச்சியை தொகுத்து வழங்க களமிறங்க போகிறார்.

இதற்காக கமலஹாசனுக்கு 130 கோடி சம்பளமாக கொடுக்கப்படுகிறது. ஏற்கனவே பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் ப்ரோமோஷன் ஷூட்டிங் நிறையவடைந்த நிலையில், விரைவில் விஜய் டிவியிலும் ஒளிபரப்பாக போகிறது.

Also Read: கமல் மெனக்கெட்டு போன் பண்ணி கூப்பிட்டும் வர மறுத்த நடிகர்.. பிக் பாஸ் உங்களுக்கு காசு எனக்கு தூசு!

எனவே வரும் அக்டோபர் 8ம் தேதி துவங்க இருக்கும் சீசன் 7 நிகழ்ச்சியில் இந்த முறை புதுவிதமாக இரண்டு வீடுகளை செட்டப் செய்துள்ளனர். இதனால் அதிக போட்டியாளர்களையும் இறக்கப் போகின்றனர்.

இந்த கான்செப்ட் ஏற்கனவே ஹிந்தி மொழியில் இருப்பதால் தமிழில் முதல் முதலாக அறிமுகப்படுத்த இருக்கின்றனர். இதில் பழைய போட்டியாளர்களையும் களம் இறக்கலாம் என்ற ஐடியாவில் விஜய் டிவி இருக்கிறது.

Also Read: குடும்பப் பிரச்சினையை வைத்து குளிர் காய நினைக்கும் விஜய் டிவி.. பிக் பாஸை நாரடிக்கப் போகும் 3 சர்ச்சையான ஜோடிகள்

Trending News