வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பற்றி இப்பொழுது பேச்சுகள் வரத் தொடங்கிவிட்டன. இதனால் தமிழக அரசியல் களமே சூடு பிடிக்க துவங்கி விட்டது. இதில் யார் யாருடன் கூட்டணி என்பது குறித்து கட்சிகள் இடையே பரபரப்பாக பேசப்படுகிறது.
அதிலும் தமிழ்நாட்டை கண்ட்ரோலுக்கு கொண்டு வருவதற்காக பல வருடங்களாக மத்தியில் ஆளும் கட்சி முயற்சி செய்வதால், வரும் மக்களவைத் தேர்தலின் மூலம் தமிழகத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக அதற்காக தற்போது மாஸ்டர் பிளான் போட்டிருக்கிறார் மோடி.
Also Read: யோசிக்க முடியாத கூட்டணி.. அடுத்த ப்ராஜெக்ட்டுக்கு தயாராகும் கமல், ராஜமௌலி
ஆனால் பாரத பிரதமர் நரேந்திர மோடி போட்டிருக்கும் பலே திட்டத்தை உலக நாயகன் கமலஹாசனை வைத்து தரம் மட்டமாக பிளான் போட்டுள்ளனர். அதாவது சமீபத்தில் டெல்லியில் நடந்த யாத்திரையில் ராகுல் காந்தியும், கமலஹாசனும் ஒன்றாக பேசி வருகின்றனர்.
மேலும் தமிழ்நாட்டை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர மோடி இந்த மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் ஏதோ ஒரு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு. அது ராமநாதபுரம் ஆக கூட இருக்க வாய்ப்பு. இதன் மூலம் தமிழகத்திற்குள் ஆழமாக காலூன்றி நிற்க முடிவெடுத்திருக்கிறார்.
இவரை எதிர்த்து போட்டியிட்ட உலகநாயகன் கமலஹாசனை நிறுத்த திட்டமிட்டு இருக்கின்றனர். இதற்கெல்லாம் முழு காரணம் தற்போது தமிழகத்தில் ஆளுங்கட்சியாக இருக்கும் திமுக தான். ஏனென்றால் வரும் மக்களவைத் தேர்தலில் திமுக காரணம் காங்கிரஸ், திமுக, மக்கள் நீதி மையம் மற்றும் இதர கட்சிகள் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
இவ்வாறு வலுவான கூட்டணியை தமிழகத்தில் உருவாக்கி வரும் மக்களவைத் தேர்தலில் மீண்டும் மத்தியில் ஆளும் கட்சியை மண்ணைக் கவ்வ வைக்க வேண்டுமென கூட்டாக செயல்பட போகின்றனர். ஆகையால் இந்த மக்களவைத் தேர்தல் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. அதை இப்போதே தொடங்கிவிட்டது இன்னும் நிறைய செய்திகள் கூடிய விரைவில் உறுதிப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read: கமல் மட்டும்தான் காமெடியில் கலக்குவாரா.? ரஜினி சக்சஸ் கொடுத்த 6 முழு நீள நகைச்சுவை படங்கள்