ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

தத்ரூவமான நடிகர் இல்லாமல் எப்படி இந்தியன் 2.. ஆண்டவருக்கு சவால் விடும் சித்தார்த்தின் அப்பா

Indian 2: ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றதை அடுத்து இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் லைக்கா தயாரிக்கும் இப்படத்தை ஷங்கர் தான் இயக்கி வருகிறார். மேலும் உலகநாயகன் கமலஹாசன் கதாநாயகனாக கதையை தாங்கிப் பிடிக்கிறார்.

மேலும் சமீபகாலமாக பெரிய ஹீரோக்களின் படங்கள் மல்டி ஸ்டார் படங்களாக உருவாகி வருகிறது. அந்த வகையில் கமல் நடிப்பில் கடைசியாக வெளியான விக்ரம் படத்தில் கூட பகத் பாசில், விஜய் சேதுபதி, சூர்யா போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். அந்தப் படமும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

Also Read : அஜித்தை விட 10 மடங்கு அதிகமா பயமுறுத்தும் போலா ஷங்கர்.. சர்ச்சையை கிளப்பி, வாயை புண்ணாக்கிய இயக்குனர்

அதேபோல் இப்போது திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் ஜெயிலர் படத்திலும் சிவராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் என பல மொழி படங்களில் பிரபலமான நடிகர்களை நடிக்க வைத்திருந்தனர். இந்த சூழலில் இந்தியன் 2 படத்திலும் மல்டி ஸ்டார் நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.

அதுவும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் தத்ரூபமாக நடிக்கக்கூடிய நடிகர் ஒருவர் இந்தியன் 2 வில் இணைந்துள்ளார். சித்தார்த்தின் அப்பா கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறாராம். அதாவது தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரிச்சயமானவர் சமுத்திரகனி.

Also Read : ஒரே வருடத்தில் 14 படங்கள், தட்டு தடுமாறிய ரஜினி.. நடிக்க பயந்து விலகிய கமல்

சமீபகாலமாக நல்ல படங்களை தேர்ந்தெடுத்து சமுத்திரக்கனி நடித்து வருகிறார். இந்த சூழலில் ஆண்டவருக்கு சவால் விடும் படியான கதாபாத்திரத்தில் இந்தியன் 2 வில் சமுத்திரக்கனி நடிக்கிறாராம். கண்டிப்பாக அவருடைய நடிப்புக்கு தீனி போடும் விதமான கதாபாத்திரத்தை தான் ஷங்கர் கொடுத்திருப்பார்.

மேலும் வருகின்ற ஏப்ரல் மாதம் இந்தியன் 2 ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டு வருகிறதாம். கமல் இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக உள்ள நிலையில் விரைவில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இருக்கிறார். மேலும் இப்படத்தை பற்றிய நிறைய அப்டேட்டுகள் விரைவில் வெளியாகி ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்த வர இருக்கிறது.

Also Read : பலான காட்சியாக இருந்தாலும் பரவாயில்லை.. கமலுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசையை நிறைவேற்றி கொண்ட நடிகை

Trending News