செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

ஓவரா கஞ்சத்தனம் பண்ணும் கமல்.. தெறிச்சி துபாய் ஓடிய ஹீரோ

Actor Kamal: 4 வயதிலிருந்து சினிமாவில் ஊறி இருக்கும் உலக நாயகன் கமலஹாசன் இப்போது இளம் ஹீரோக்களை வைத்து படங்களை தயாரிக்க முன் வந்திருக்கிறார். கமலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனத்தில் சிம்பு, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட ஹீரோக்கள் படம் நடித்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆனால் இப்போது கமல் நடந்துக்கிறத பார்த்தா யாருமே அவருடைய தயாரிப்பில் படம் பண்ண முன்வர தயங்குகின்றனர். ஏனென்றால் அந்த அளவிற்கு கமல் ஓவரா பண விஷயத்தில் கஞ்சத்தனம் பண்ணுகிறார். இவருடைய படங்களை மட்டும் 100 கோடிக்கு மேல் பிரம்மாண்டமாக தயாரிக்கிறார். ஆனால் இவர் தயாரிக்கும் படங்களில் மட்டும் சிக்கனம் காட்டுகிறார்

ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் படத்தை கமல் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் இந்த படத்திற்கு 60 கோடி கொடுத்து தயாரிக்க முடியாது என கமல் சொல்லியதால் அந்த படம் அப்படியே டிராப் ஆனது.

Also Read: அந்தப் படமும் காப்பி படம் தான்.. உண்மையை ஒத்துக்கிட்ட உலக நாயகன்

இழுப்பறியில் எஸ்டிஆர் 48

இப்போது சிம்பு நடிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கும் எஸ்டிஆர் 48 படத்தை கமலின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தை வரலாற்று பின்னணியில் மிகப் பிரம்மாண்டமாக எடுக்கும் திட்டத்தில் தேசிங்கு பெரியசாமி இருக்கிறார். ஆனால் இந்த படத்திற்காக 50 கோடிக்கு மேல் செலவு செய்ய முடியாது என்று கமல் அடம் பிடிக்கிறார்.

இந்த படத்திற்காகவே தான் சிம்பு தாய்லாந்து வரை சென்று மார்ஷியல் ஆர்ட்ஸ் உள்ளிட்ட கலைகளை மெனக்கெட்டு கற்றுக் கொண்டார். ஆனால் அதையெல்லாம் புரிந்து கொள்ளாத கமல் இப்போது இவ்வளவு கறாராக பேசுகிறார்.

இப்போது இந்த படம் இழுவையில் இருப்பதால் சிம்பு கடும் கோபத்தில் துபாய் கிளம்பி போயிட்டார். ஆனால் தேசிங்கு பெரியசாமி இந்த படத்தை எப்படியாவது எடுக்க வேண்டும் என்ற முனைப்புடன் உலக நாயகனே சமாதானம் செய்யும் முயற்சியில் இருக்கிறார். ஆனால் கமல் கொஞ்சம் கூட பிடி கொடுக்காமல் பேசுகிறார்.

Also Read: கமலுக்கு டேக்கா கொடுத்த ஹாட்ஸ்டார்.. தலையில் துண்டை போட்ட ஆண்டவர்

Trending News