திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

தரமான சம்பவத்திற்கு காத்திருக்கும் கமல்.. விஸ்வரூப வேகத்தில் பறக்கும் பச்சைக்கொடி

Actor Kamal: பிரம்மாண்டத்தின் படைப்பாய் மாபெரும் வெற்றியை பெற்று தந்த படம் தான் விக்ரம். இப்பட வெற்றிக்கு பிறகு கமலை பிடிக்கவே முடியவில்லை என இயக்குனர்கள் கூறும் நிலையில், தற்பொழுது தன் அடுத்த கட்ட படங்களுக்கு பச்சைக் கொடி காட்டி, எதிர்பார்ப்பை உண்டுபடுத்தி வருகிறார்.

தமிழ் சினிமாவில் மாபெரும் கலைஞனாய் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டவர் தான் உலகநாயகன். இவரின் விக்ரம் படம் பிளாக் பாஸ்டர் ஹிட் கொடுத்ததற்கு பிறகு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி வருகிறார். அவ்வாறு சங்கர் இயக்கத்தில் உருவாகும் படம் தான் இந்தியன் 2.

Also Read: தொழிலதிபருடன் நெருக்கம் காட்டிய டாப் நடிகை.. பணம் சம்பாதிக்க இப்படி ஒரு வழியா?

இப்படத்தில் சித்தார்த், ராகுல் பிரீத் சிங், ப்ரியா பவானி சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து உள்ள நிலையில் வெளிவரும் தேதியை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிப்பில் எஸ்.கே 21 கமலஹாசனின் ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் தயாரிப்பை மேற்கொள்கிறது. இதில் சாய் பல்லவி, சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக இணைய உள்ளார். மேலும் இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கத்தில், ராஜ்கமல் தயாரிப்பில் உருவாகும் படம் தான் எஸ் டி ஆர் 48.

Also Read: சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுத்து ஏமாந்துட்டேன்.. கோமண நடிகர் கூறிய பகிர் உண்மை

கமல்- சிம்புவின் கூட்டணியில் உருவாகும் இப்படம் ரசிகர்கள் இடையே எதிர்பார்ப்பை முன்வைத்து வருகிறது. மேலும் நெல்சன் இயக்கத்தில், கமல் தயாரிப்பில் தனுஷ் ப்ராஜெக்ட்டும் உருவாக உள்ளது. அதைத்தொடர்ந்து துணிவு பட வெற்றிக்குப் பிறகு ஹெச் வினோத் கமலை வைத்து படம் இயக்கப் போவதாக கூறிவந்த நிலையில், இந்தியன் 2வில் பிஸியாக இருக்கும் கமல் அப்படத்தை முடித்தவுடன் தொடங்குவார் என கூறப்படுகிறது.

இது போன்ற பல படங்களை தன் கை வசம் வைத்துள்ள கமல், ஐந்து வேலையும் ரொம்ப பிசியாக இருந்து வருகிறார். இத்தகைய விஸ்வரூப வளர்ச்சிற்கு பச்சைக்கொடி காட்டும் இவரின் படங்களை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர் ரசிகர்கள்.

Also Read: இமேஜை பொருட்படுத்தாமல் மீனா செய்த காரியம்.. நடுரோட்டில் அரங்கேறிய சம்பவம்

Trending News