புதன்கிழமை, ஜனவரி 15, 2025

லால் சலாமுக்கு போட்டியாக இறங்கிய கமல்.. மகளுடன் கஜானாவை நிரப்ப எடுக்கும் அவதாரம்

Lal Salaam-Kamal: சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஜெயிலர் வெற்றியை தொடர்ந்து தனது மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லால் சலாம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். ஏற்கனவே ரஜினி, சௌந்தர்யா காம்போவில் படம் வெளியாகி உள்ள நிலையில் முதன்முறையாக ஐஸ்வர்யாவுடன் சூப்பர் ஸ்டார் கூட்டணி போட்டிருக்கிறார்.

இந்த படத்திற்கான படப்பிடிப்பு முடிந்த நிலையில் பின்னணி வேலைகள் மும்மரமாக நடந்து வருகிறது. மேலும் லால் சலாமுக்கு போட்டியாக இப்போது அப்பா, மகள் காம்போவில் புதிய அவதாரம் எடுக்கிறார் கமல். அதாவது உலக நாயகன் கமலின் மகள் ஸ்ருதிஹாசன் இசையில் மிகுந்த ஆர்வம் உடையவர்.

Also Read : 2024 ஆம் ஆண்டு தீபாவளியை குறி வைக்கும் ரஜினி படம்.. ஜெயிலரில் விட்ட 1000 கோடி வசூலுக்கு போட்ட அடித்தளம்

அதன் பிறகு கதாநாயகியாக சினிமாவில் அறிமுகமாகி டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட்டு நடித்தார். இப்போதும் ஒரு சில படங்களின் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்து வரும் நிலையில் தனது தந்தையுடன் பாடல் சம்பந்தமாக புதிய ஆல்பம் ஒன்று உருவாக்க இருக்கிறாராம்.

மேலும் இந்த மியூசிக் ஆல்பத்தை கமல் தனது ராஜ்கமல் நிறுவனத்தின் மூலம் தான் தயாரிக்க இருக்கிறார். ஏற்கனவே கமல் ஒரு புறம் அடுத்தடுத்த படங்களில் கதாநாயகனாக கமிட்டாகி பிஸியாகி கொண்டிருக்கிறார். போதாக்குறைக்கு அக்டோபர் 1ஆம் தேதியிலிருந்து பிக் பாஸ் நிகழ்ச்சியும் தொடங்க இருக்கிறது.

Also Read : நானும் தற்கொலைக்கு முயற்சித்தேன்.. மேடையில் மனம் திறந்து பேசிய கமல்

இந்த முறையும் தொகுப்பாளராக கமல் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க இருக்கிறார். மற்றொருபுறம் தயாரிப்பில் ராஜ்கமல் நிறுவனம் பட்டையை கிளம்பி வருகிறது. முன்னணி மற்றும் இளம் ஹீரோக்களின் படங்களை வரிசையாக தயாரித்து வருகிறது. மேலும் அரசியலில் சுற்றுப்பயணமும் இப்போது கமல் மேற்கொண்டு இருக்கிறார்.

இவ்வாறு ஒரு நாளைக்கு 24 மேலும் போதாது என்ற அளவுக்கு தான் கமல் தன்னை பிசியாக வைத்துக் கொண்டிருக்கிறார். இந்த சூழலில் மகளுடன் சேர்ந்து கல்லா கட்டுவதற்காக மியூசிக் ஆல்பம் உருவாக இருக்கிறார். கமல் ஒரு பன்முகத்தன்மை கொண்டவர் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான். அதுவும் இசையில் அவர் சகலகலா வல்லவனாக உள்ள நிலையில் மகளுடன் உருவாகும் இந்த ஆல்பம் வேற லெவலில் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

Also Read : கமல் படத்திற்கு வந்த தடை.. சதியை உடைத்து மண்டியிட வைத்த உலகநாயகன்

Trending News