ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 9, 2025

தனுஷின் வெற்றி இயக்குனர் கூட்டணியில் கமலஹாசன்.. அனல் பறக்கும் லேட்டஸ்ட் அப்டேட்!

தேர்தல் பிரச்சாரம் துவங்கியதிலிருந்து பிசியாக இருந்த உலகநாயகன் கமலஹாசன் இப்போது சில படங்களை நடித்து வருகிறார். களப்பணி, கலைப்பணி என இரண்டையும் சரியாக சாமர்த்தியமாக கையாண்டு வருகிறார்.

தேர்தலுக்கு முன்பே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ராஜ்கமல் ஃபிலிம் தயாரிக்கும் “விக்ரம்” படத்தின் போஸ்டரும் டீசரும் வெளிவந்திருந்தது. இப்படத்தின் வில்லனாக விஜய் சேதுபதியை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடக்கிறது.

அதனை தொடர்ந்து கமலஹாசன் நடிக்க வேண்டிய பல்வேறு காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்ட நிலையில் அடுத்த படம் பற்றிய செய்தி கிடைத்துள்ளது. ஆடுகளம், பொல்லாதவன், அசுரன் போன்ற வெற்றிப்படங்களின் இயக்குனர் “வெற்றிமாறன்” கமலஹாசனை இயக்க விருக்கிறார்.

இப்போது சூர்யா நடிக்கும் “வாடிவாசல்” படத்தில் பிசியாக இருக்கும் வெற்றிமாறன். அடுத்த புராஜக்டாக கமலஹாசனை இயக்க முடிவெடுத்து பேச்சுவார்த்தை நடைபெறுகிறதாம்.

தயாரிப்பு நிறுவனம் எது என்பது இப்போது வரை உறுதிப்படுத்தப்படவில்லை. கமலஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இந்த படத்தை இயக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெற்றிமாறன் கூட்டணியில் முதல் முறையாக இணையும் கமலஹாசனுக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என்பதில் எந்த ஒரு ஆச்சரியமும் இல்லை. இதுவே இரசிகர்களின் ஆசையாக பார்க்கப்படுகிறது.

vetrimaran
vetrimaran

Trending News