திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ரகசியமாய் அடிக்கடி அமெரிக்கா செல்லும் கமல்.. காஸ்டியூம் டிசைனருடன் இப்படி ஒரு கூட்டணியா?

Kamal joins with costume designer Amritharam to do business: உலகநாயகன் என்ற பெயருக்கு ஏற்றவாறு கமல் உலகம் சுற்றும் வாலிபராக தன் கலையை விஸ்தரித்து வருகிறார். ஆள் பாதி ஆடை பாதி என்ற கூற்றுக்கு இணங்க நம் ஆடையே நமது எண்ணங்களை வெளிப்படுத்தும் கண்ணாடியாக இருந்து வருகிறது. எப்பவுமே கமல் தனது சூசகமான ஆடைகள் மூலமாக இந்த உலகத்திற்கு சொல்ல வேண்டிய செய்தியை கூறுவார் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.

உலகநாயகன் கமல் விக்ரமின் அசூரத்தனமான வெற்றிக்கு பின் இந்தியன் 2 மற்றும் 3, மணிரத்தினத்துடன் தக்லைப் என பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். கமலை போலவே அவருடைய ஆடையும் எப்போதும் பேசுபொருளாக மாறி விடுவது உண்டு. எப்போதும் பொது வெளியில் நிகழ்ச்சிகளின் போது மறைமுகமான கருத்தை அந்த ஆடை மூலம் வெளிப்படுத்தி விடுவதில் வல்லவர் கமல்.

பிக்பாஸ் ஷோ நிகழ்ச்சியின் போது ஒவ்வொரு வாரமும் விதவிதமான ஆடைகளை அணிந்து அதன் கருப்பொருளை விளக்குவார். கடந்த சில ஆண்டுகளாகவே கதருக்கு முக்கியத்துவம் அளிப்பவராக மாறியுள்ளார் கமல். அடிக்கடி மாடர்ன் பேஷன் உடன் கலந்த கதர் ஆடைகளை  விரும்பி அணிந்து வருகிறார்.

Also read: கமல் நடிக்க ஆசைப்பட்ட 4 படங்கள்.. மணிரத்தினத்தின் மூன்று படங்களை தவற விட்ட ரங்கராய நாயகன்

கமலின் ஆரம்ப காலத்தில் அவரது படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக அவரது துணைவி வாணி கணபதி மற்றும் சரிகா பணியாற்றியுள்ளனர். மேலும் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நடிகை கௌதமியும் அவருடன் பல படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி இருந்தார். தற்போது கமலின் ஆடை வடிவமைப்பாளராக மற்றும் அவரது வலது கரமாகவும் மாறியுள்ளார் பிரபல டான்ஸ் மாஸ்டரின் மனைவி அமிர்தா ராம்.

இந்திய ஆடை வடிவமைப்பாளர், தொகுப்பாளினி, வளர்ந்து வரும் தொழிலதிபர் என பன்முகம் கொண்ட அமிர்தா ராம் கமலின் காஸ்ட்யூம் டிசைனர் ஆவார். மிஷ்கினின் முகமூடி படத்தில் காஸ்ட்யூம் டிசைனராக அறிமுகமானார் அமிர்தாராம். மேலும் வெற்றி மாறனின் வடசென்னை,ஸ்கெட்ச் விஸ்வரூபம் 2  போன்ற படங்களிலும் பணியாற்றி உள்ளார்.

தற்போது கமலுடன் இந்தியன் 2 மற்றும் 3 மணிரத்தினத்தின் தக் லைப் என அவரது அடுத்தடுத்த படங்களுக்கு காஸ்ட்யூம்  டிசைனராக பணியாற்றி  வரும் அமிர்தா ராமுடன் கூட்டணி வைத்து அமெரிக்காவில் கே எச் ஹவுஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் கதர் ஆடை பிசினஸ் பண்ணுகிறாராம். இதற்காகத்தான் வருடத்திற்கு நான்கு ஐந்து முறை அமெரிக்கா சென்று வருகிறாராம் கமல்.

Also read: நாலு கெட்டபில் மிரட்ட வரும் ரங்கராய நாயக்கன்.. மணிரத்தினத்தை நிம்மதி பெருமூச்சு விட வைத்த கமல்

Trending News